நுரையீரல் தொற்று காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கடந்த 14 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை அவ்வப்போது பின்னடைவை சந்தித்தும் பின்னர் முன்னேறியும் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. தீவிர சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவை அவ்வப்போது அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் இன்று சென்னை MGM மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வி.எஸ். பாபுவை நேரில் சந்தித்தார். மேலும் அவரது உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்து, தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நிலை தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் கொடுமை: விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்!” – அன்புமணி நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? ஆசிய விளையாட்டுப் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை! “நான் திருடியதாக சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!” – அம்பிகா விளக்கம்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk