வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளது. எழுதியவர்: அனிஷ் மொண்டல் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU) மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளது. அதாவது, இந்த வேலைநிறுத்தம் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தொடர உள்ளது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க இந்த வேலைநிறுத்தக் காலத்தில் வங்கி கிளைகளில் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு எஸ்.பி.ஐ வங்கி, வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் வார இறுதி நாட்களாக (சனி மற்றும் ஞாயிறு) வருவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு வங்கி சேவைகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டு உள்ளது. வங்கி தொழிற்சங்கங்கள் ஏன் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன? வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாக அமல்படுத்துதல், ஓய்வூதிய பலன்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்கின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. பி.டி.ஐ செய்தியின்படி, யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் சுமார் 90 சதவீத வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகிறது. யு.எஃப்.பி.யு-வின் கீழ் உள்ள வங்கி தொழிற்சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னதாக செப்டம்பர் 11 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது. வங்கி வேலைநிறுத்தம் குறித்து எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கி கிளைக்கு நேரில் செல்ல வேண்டிய அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய பரிவர்த்தனைகளை செய்ய வேண்டிய வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்த தேதிகளுக்கு முன்னதாகவே அவற்றை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. வேலைநிறுத்தக் காலத்தில் பணத் தேவைகளுக்கு ஏ.டி.எம்-கள் மற்றும் தானியங்கி பணம் வைப்பு மற்றும் எடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்துமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர் சேவை மையங்கள், இணைய வங்கிச் சேவை, யோனோ, மொபைல் பேங்கிங், யு.பி.ஐ மற்றும் பிற டிஜிட்டல் வங்கிச் சேனல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. pic.twitter.com/UA0wJrsOMI இதற்கிடையில், இந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்தின் போது வங்கிச் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய வாடிக்கையாளர் சேவைகள் தொடர்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளின் முதன்மை நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. பி.டி.ஐ செய்தியின்படி, வேலைநிறுத்தத்தின் போது இடையூறுகளைக் குறைக்கவும், வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய வங்கி வசதிகளைத் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்யவும் இந்தச் சந்திப்பில் அவசரகாலக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
3 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்; வாடிக்கையாளர்கள் உடனே இதை பண்ணுங்க: எஸ்.பி.ஐ வெளியிட்ட அவசர பதிவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk