ஸ்டீபன் கிங் எழுதிய ரீட்டா ஹெவொர்த்த அண்ட் தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது. பொதுவாக ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன், அதில் இருக்கும் ஏதாவது ஒரு விஷயம் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதனால் அந்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் ஒரு படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகியுள்ளது. இன்றைக்கும் அந்த படத்தை பார்க்கும்போது புதிதாக பார்க்கும் ஒரு உணர்வை கொடுக்கும். அந்த படம் தான் ஹாலிவுட்டில் வெளியான தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படம். 1994-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ப்ரான்க் டோரபெண்ட் இயக்கியிருந்தார். டிம் ராபின்ஸ், மார்கன் ப்ரீமேன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஸ்டீபன் கிங் எழுதிய ரீட்டா ஹெவொர்த்த அண்ட் தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது. செய்யாத குற்றத்திற்காக சிறை சென்று தண்டனை அனுபவிக்கும் ஹீரோ, தான் குற்றமற்றவன் என்று தெரிந்தும், தனக்கு அதிகாரிகள் உதவ முன்வராததால் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். அவரின் முயற்சி வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன நடந்தது என்பதை மெனுவாக சொன்னாலும், கவனத்தை ஈர்க்கும் வகையில் சொன்ன படம் தான் தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன். ஹாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் சிறைச்சாலைகளை கடுமையான வன்முறை, சாதுரியமான தப்பித்தல்கள் மற்றும் பிரம்மாண்டமான மோதல்கள் நிறைந்த நாடகக் களங்களாகக் சித்தரிக்கின்றன. ஆனால், நிஜமான சிறைச்சாலைகள் அப்படி இருப்பதில்லை. அவை கண்டிப்பான தினசரி நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் வழிமுறைகள், மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் (Correctional Officers) பணியில் சந்திக்கும் அன்றாட ஆபத்துகளால் வரையறுக்கப்படுகின்றன. The Shawshank Redemption was released 32 years ago today. A film with unmatched storytelling, heart, and the greatest reminder that "Hope is a good thing. Maybe the best of things. And no good thing ever dies." A timeless masterpiece.✨ pic.twitter.com/YymDEOLQLa அந்த வகையில், "தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன்" (1994) திரைப்படம், ஒவ்வொரு அதிகாரியும் மேற்பார்வையாளர்கள் பற்றியும், சிறை கைதிகள் பற்றியும், அவர்கள் வெளியில் வந்தால் இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கும்? அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதையும் தெளிவாக காட்சியமைத்த படம். இந்த சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்யும் ஹீரோ (ஆண்டி டுஃப்ரேன்) ஒரு சிறிய சுத்தியலைப் பயன்படுத்தி தனது அறையின் சிமென்ட் சுவரை மெதுவாகச் செதுக்கி, சிறையின் கழிவுநீர் அமைப்புக்கு செல்லும் ஒரு சுரங்கப் பாதையை உருவாக்குவார். Exactly 32 years ago, the Shawshank Redemption was released in the US, and it was a theatrical flop, recovering just $16 million in its first run. But like Andy Dufresne, the film came back. Word of mouth made sure it dominated the video rental market, its re-release made $73… pic.twitter.com/K328GWiLlO இந்த சுரங்கத்தை மறைக்க, மூவி ஸ்டார் ரீடா ஹேவொர்த்தின் பெரிய போஸ்டரை பயன்படுத்தி இருப்பார். படத்தின் க்ளைமேக்ஸில், அவர் தப்பித்த இரவில், அவர் அந்தத் துளை வழியாக ஊர்ந்து சென்று, கழிவுநீர்க் குழாயை உடைத்து, அதன் வழியாக நகர்ந்து சென்று கழிவுநீர் கால்வாயில் விழுந்து தப்பிப்பார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மெதுவாக நகர்ந்தாலும், எந்த இடத்திலும் போர் அடிக்காத வகையில் திரைக்கதை அமைத்திருப்பார்கள். குறிப்பாக ரெட் - ஆண்டி இடையேயான நட்பு மிகவும் ஆழமாக காட்டியிருப்பார். Brooks was here.The Shawshank Redemption (1994) is a powerful prison drama about Andy Dufresne (Tim Robbins), a banker wrongly convicted of murder, who forms a deep friendship with fellow inmate Red (Morgan Freeman). Over decades, Andy's quiet resilience and hope lead to one of… https://t.co/jHNXzthWurpic.twitter.com/TffLpzfbdi இந்த படம் வெளியாகி 32 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்த படத்தை சொல்லலாம். இப்படம் பாராட்டுக்களுடன் வெளியானாலும், ஆரம்பத்தில் ஃபாரஸ்ட் கம்ப் மற்றும் பல்ப் ஃபிக்ஷன் படங்களின் தாக்கத்தால் வெறும் 16 மில்லியன் டாலர்களை மட்டுமே ஈட்டியது. பின்னர், வாய்மொழிப் பிரசாரம், வாடகை வசூல் மற்றும் ஆஸ்கர் விருதுக்கான எதிர்பார்ப்பு ஆகியவற்றால் படத்தின் உலகளாவிய வசூல் 73.3 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது. One only needs to see a clip of this iconic scene to not only recognize the film, but to become immersed in the timeless story of hope. Hope that the light always outshines the darkness."The Shawshank Redemption" did not fare well in its general release this day of 9/23/1994,… pic.twitter.com/t3z5VvawAi தற்போது ஐ.எம்.டி.பி (IMDb)-யில் 9.3 மதிப்பெண்ணுடன் ஒரு சிறந்த கிளாசிக் படமாகத் திகழ்ந்து, அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள இப்படம், ஒரு தோல்விப் படத்திலிருந்து ரசிகர்களின் விருப்பமான படமாக மாறிய தனது பயணத்தை, அது கொண்டாடும் விடாமுயற்சியைப் பிரதிபலிக்கிறது. 32 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த படம் பலரின் ஃபேவரெட் படமாக இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு உதாரணம்; 32 ஆண்டுகளாக முதலிடத்தை விடாத சூப்பர் ஹிட் படம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk