Asian Games 2026 | 44 ஆண்டுகளுக்குப் பிறகு.. மராத்தானில் பதக்கத்தை வேட்டையாடிய இந்தியா!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
Asian Games 2026 | 44 ஆண்டுகளுக்குப் பிறகு.. மராத்தானில் பதக்கத்தை வேட்டையாடிய இந்தியா!

2026 ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் மராத்தான் (42.195 கி.மீ) பிரிவில் இந்திய வீரர் சவான் பார்வால் (Sawan Barwal) வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு மராத்தானில் இந்தியாவுக்கு 44 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. ஜப்பானின் நகோயா நகரில், கடந்த செப்டம்பர் 19-ஆம் தொடங்கிய 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு, விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில் இந்தியா பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்களை வேட்டையாடி வருகிறது. அந்த வகையில், ஆடவர் மராத்தான் (42.195 கி.மீ) பிரிவில் இந்திய வீரர் சவான் பார்வால் (Sawan Barwal) வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சவான் பார்வால், பந்தய தூரத்தை 2 மணி 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் (2:11:37) கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முன்னதாக ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற ரோட்டர்டாம் மராத்தானில் 2:11:58 ஓடியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இதன்மூலம் அவர் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து புதிய இந்திய சாதனையைப் படைத்துள்ளார். இந்தச் சரித்திர சாதனை மூலம் ஆசிய விளையாட்டு மராத்தானில் இந்தியாவுக்கு 44 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. 1982-இல் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் எச்.கே.சீதாராம் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, மராத்தான் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே இந்தியாவிற்கு வெளியே (வெளிநாட்டு மண்ணில்) நடைபெறும் மராத்தான் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், 1951 (புதுடெல்லி) ஆசிய விளையாட்டில் சோட்டா சிங் (தங்கம்), சூரத் சிங் மாதூர் (வெண்கலம்) மற்றும் 1982-இல் எச்.கே.சீதாராம் (வெண்கலம்) ஆகியோருக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் மராத்தான் பதக்கம் வெல்லும் 4-ஆவது இந்தியர் சவான் பார்வால் ஆவார். ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சவான் பார்வால், இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவில் ஹவில்தாராகப் பணியாற்றி வருகிறார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை