2027 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க 84 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளதைப் பற்றி... இந்தியா - பாகிஸ்தான். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு 34,000 இருக்கைகள் கொண்ட திடலில் போட்டியைப் பார்க்க 84 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் அடுத்தாண்டு (2027) நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணை அக். 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2027) காந்தி பிறந்தநாளான அக். 2 ஆம் தேதி தொடங்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. குரூப் ஏ, குரூப் பி என இரண்டு பிரிவுகளாக மொத்தமாக 12 அணிகளில் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி, குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அக். 2 ஆம் தேதி தொடங்கும் போட்டியில் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணிகள் விளையாடுகின்றன. இந்தியா தனக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அக். 7 ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து அக். 10 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பர்க் தி வாண்டரர் திடலில் 34,000 பேருக்கான இருக்கைகள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தப் போட்டியைப் பார்க்க 84 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐசிசி அளித்த தகவலின்படி, நடைபெற்று வரும் டிக்கெட் குலுக்கலின் ஒரு பகுதியாக, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு 83,97,294 பேர் டிக்கெட் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட 79 லட்சம் (79,00,944) பேர் டிக்கெட்டுகள் வேண்டி கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதனைவிட இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
34,000 இருக்கைகள் உள்ள திடலில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க 84 லட்சம் பேர் விருப்பம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗