400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் NAFED நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தரமற்றதாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த கொள்முதல் ஆணையை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ரத்து செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடம் இருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) வழங்கிய ஆணை, வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்துக்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழக அரசு சந்தைக் குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் 03.09.2026 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள TUCS நியாயவிலைக் கடையில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். கூட்டுறவுத் துறையின் 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, NAFED நிறுவனத்தின் மூலம் 910 மெட்ரிக் டன்னும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து (NCCF) 65 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் 949.44 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 922.92 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 97 ஆகும். இரண்டாம் கட்டமாக, NAFED மூலம் 1,414.33 மெட்ரிக் டன்னும், NCCF மூலம் 460 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் 848.31 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 811.26 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 96 ஆகும். இதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்டமாக சுமார் 700 மெட்ரிக் டன் வெங்காயம் NCCF நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 700.19 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 646.14 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 92 ஆகும். இவ்வாறு, மூன்று கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 2,380.32 மெட்ரிக் டன் வெங்காயம் நியாயவிலைக் கடைகள் மூலம் இதுவரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரப்பெற்ற வெங்காயம் அனைத்தும் 25 நாட்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்து விட்டது. ரேசன் கடைகள் மூலம் வெங்காய விற்பனை தற்போது நடைபெறவில்லை. NAFED நிறுவனத்திடமிருந்து கிலோ ரூ.29/- வீதம் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ஆணை வழங்கியிருந்தது. இக்கொள்முதலுக்கான வெங்காயம் 'A' தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 'A' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயங்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. மேலும், கொருக்குப்பேட்டைக்கு வந்த வெங்காய சரக்கை 31.10.2026 அன்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தபோது, மாதிரி மூட்டைகளில் 20 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது. அத்துடன், 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிட குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) 31.10.2026 அன்றே NAFED நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை ரத்து செய்தது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாகக் கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்துக்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல. தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நுகர்வோர் நலனையும் கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நலனையும் பாதுகாக்க கூட்டுறவுத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை