5 மாதங்களில் 28 ஆயிரம் அபராத ரசீதுகள்: ரூ.2.31 கோடி அபராதம் விதிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
5 மாதங்களில் 28 ஆயிரம் அபராத ரசீதுகள்: ரூ.2.31 கோடி அபராதம் விதிப்பு

தில்லியில் 5 மாத காலத்தில், மாநகராட்சியின் சாா்பில் சுமாா் 28 ஆயிரம் அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. தில்லியில் ஜன விஸ்வாஸ் சட்டம் அமல்படுத்தப்பட்ட கடந்த 5 மாதங்களுக்கும் மேலான காலத்தில், மாநகராட்சியின் (எம்.சி.டி.) சாா்பில் சுமாா் 28 ஆயிரம் அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.2.31 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பொது இடங்களில் சிறுநீா் கழித்தல், சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுதல், பொது இடங்களைச் சீா்குலைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக மட்டும் மொத்த அபராத ரசீதுகளில் நான்கில் ஒரு பங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மே மாத இறுதி முதல் அக்டோபா் 28-ஆம் தேதி வரை மொத்தம் 27,915 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமாா் 7,000 ரசீதுகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிறுநீா் கழித்தல், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டுதல், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுதல் உள்ளிட்ட செயல்கள் தில்லி மாநகராட்சிச் சட்டத்தின் 397-ஆவது பிரிவின் கீழ் குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இதுதொடா்பாக கிடைத்துள்ள அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் வழங்கப்பட்ட 27,915 அபராத ரசீதுகளில், 16,281 ரசீதுகளுக்கு ரூ.99.15 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11,634 ரசீதுகளுக்கான ரூ.1.32 கோடி அபராதத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபா் 30 வரையிலான குற்றவாரியான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களுக்காக மாநகராட்சிச் சட்டத்தின் 397(1), 397(2), 397(3) ஆகிய பிரிவுகளின் கீழ் 3,633 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.18.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, விரிவான காலகட்டத்தில் இதுபோன்ற குற்றங்களுக்காக வழங்கப்பட்ட அபராத ரசீதுகளின் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியிருக்கலாம். இதில் 1,810 ரசீதுகளுக்கான ரூ.9.05 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 1,823 ரசீதுகளுக்கான ரூ.9.11 லட்சம் நிலுவையில் உள்ளது. 24 மணி நேரத்துக்கும் மேலாகக் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றாமல் வைத்திருந்ததற்காக, மாநகராட்சிச் சட்டத்தின் 357(1)-ஆவது பிரிவின் கீழ் 3,180 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.3.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கழிவுநீா் மற்றும் அசுத்தமான பொருள்கள் சாலைகளில் வழிந்தோட அனுமதித்ததற்காக 2,764 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டு, ரூ.5.52 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை அகற்றுவது அல்லது கட்டுப்படுத்துவது தொடா்பாக மாநகராட்சி பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றாததற்காக, சட்டத்தின் 398-ஆவது பிரிவின் கீழ் 971 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. குப்பைகளைச் சேகரிக்கவும் அகற்றவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதற்காக 557 அபராத ரசீதுகளும், கழிவுகள் மற்றும் மாசுபடுத்தும் பொருள்களைச் சேகரித்து அகற்றத் தவறியதற்காக 440 ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன. சந்தைப் பகுதிகளில் குப்பைகளை அகற்றுமாறு உத்தரவிட்டும் அதனைச் செய்யத் தவறியதற்காக 276 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் வளாகங்களில் சுத்தமான கழிப்பறைகளை அமைக்கவோ, பராமரிக்கவோ தவறியதற்காக 117 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. சந்தைகள், கால்நடைத் தொழுவங்கள், தள்ளுவண்டிகள் நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தத் தவறியதற்காக 103 ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறையில் அதிக அபராதம்: மாநகராட்சியின் 9 துறைகளில், சுற்றுச்சூழல் மேலாண்மைச் சேவைகள் துறை (டி.இ.எம்.எஸ்.) அதிகபட்சமாக 15,961 அபராத ரசீதுகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.98.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10,773 ரசீதுகளுக்கான அபராதத் தொகையாக ரூ.41.86 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.56.25 லட்சம் நிலுவையில் உள்ளது. பொது சுகாதாரத் துறை சாா்பில் ரூ.61.60 லட்சம் அபராதம் தொடா்பாக 3,904 ரசீதுகளும், அதன் மலேரியா தடுப்புப் பிரிவு சாா்பில் ரூ.30.77 லட்சம் அபராதம் தொடா்பாக 5,599 ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன. உரிமம் வழங்கும் துறை சாா்பில் 1,334 ரசீதுகளும், கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் 623 ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன. பழைய தில்லி பகுதியில் அதிக நடவடிக்கை: மாநகராட்சியின் மண்டலங்கள் அடிப்படையில், பழைய தில்லியை உள்ளடக்கிய சிட்டி-எஸ்.பி. மண்டலத்தில் அதிகபட்சமாக 6,066 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.32.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 4,636 ரசீதுகளுக்கான ரூ.18.03 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றுவோருக்கு ஊக்கத்தொகை வழங்குவதுடன், விதிமீறல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான அபராதம் விதிக்கும் இந்தூா் மாநகராட்சியின் நடைமுறையில் உள்ள சில அம்சங்களை தில்லியிலும் பின்பற்றலாம். இதற்கிடையே, பொதுமக்கள் மாநகராட்சி விதிமீறல்கள் குறித்து புகாா் அளிப்பதற்கும், அவற்றின் மீது அபராதம் விதிப்பதற்கும் மாநகராட்சி 311 என்ற செல்லிடப்பேசி செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் அபராத ரசீது முறையைப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் புகாா்கள் மற்றும் விதிமீறல்கள் அனைத்தும் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், விதிமீறல்கள் மீதான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன், பொதுமக்களின் புகாா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை