7.11.1976: இந்தியாவின் 2-வது செயற்கைக் கோள்: 1978-ல் தயாராகிவிடும்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
7.11.1976: இந்தியாவின் 2-வது செயற்கைக் கோள்: 1978-ல் தயாராகிவிடும்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி. 7.11.1976 - Dinamani பெங்களூர், நவ. 6 - இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள் வானில் பறக்கவிடப்படுவதற்கு 1978 மத்தியில் தயாராகிவிடும். அந்த ஆண்டு பிற்பகுதியில் அது ரஷிய வானவெளி நிலையத்திலிருந்து வானில் செலுத்தப்படும் என்று இந்திய விஞ்ஞான செயற்கை கோள் திட்டத்தின் டைரக்டரான பேராசிரியர் யு.ஆர். ராவ் தெரிவித்தார். பெங்களூர், நிருபர்கள் கழகத்தில் அவர் பேசினார். இரண்டாவது செயற்கைகோள் முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படுவதாக அவர் சொன்னார். அதை தயாரிக்கும் வேலை பாதி முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செயற்கைகோளின் யந்திர மாடல் இப்போது தேசிய வானியல் சோதனை கூடத்தில் சோதிக்கப்பட்டு வருவதாகவும் மின்சார மாடல் சம்பந்தப்பட்ட வேலையும் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். அடுத்து இச்செயற்கைக் கோளின் மூல முன் மாதிரி தயாரிக்கப்படும். வானில் செலுத்தப்படும் செயற்கை கோள் 1978 மத்தியில் தயாராகி அந்த ஆண்டு பிற்பகுதியில் வானில் செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார். “பூமியில் 300 கிலோ மீட்டர் நீளமும், 300 கிலோ மீட்டர் அகலமும் உள்ள பிராந்தியங்களைப் புகைப்படங்களாகப் பிடிப்பதற்கான வசதிகள் இரண்டாவது செயற்கைக் கோளில் இருக்கும். இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட முதலாவது செயற்கைக் கோளான “ஆர்யபட்டா” தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பேராசிரியர் ராவ் பதிலளிக்கையில், ஆர்டபட்டா செயற்கைக் கோளானது நமது தொழில் நுட்பத் திறமையில் நமக்கு முழு நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் அத்துடன் இரண்டாவது செயற்கைக்கோளைத் தயாரிப்பதற்கான தகவல்களை அளித்துள்ளது என்றும் கூறினார். ஆர்யபட்டா நன்கு செயல்பட்டு வருகிறது. தரை நிலையத்திலிருந்து அனுப்பப்படும் உத்தரவுகளுக்கு ஏற்ப தகவல்களை அனுப்பி வருகிறது. அது சுமார் 10 ஆண்டுகளுக்கு வானில் இருக்கும். இது அதனிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதற்கு மேலாகும் என்று பேராசிரியர் ராவ் சொன்னார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை