முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம் குறித்து... நயினார் நாகேந்திரன் - கோப்புப்படம் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு படுபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் ‘தவெக’ ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! சென்னை அடுத்த செங்குன்றத்தில், காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து, குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள். அடிப்படை நிர்வாகத் திறனும் அரசியல் முதிர்ச்சியும் அற்ற ஒரு தலைமையால் பொது அமைதி எப்படி நிலைகுலையும் என்பதற்குத் தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களே அப்பட்டமான சாட்சி! என கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு