ராமாயணா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றி... ராமாயணா பட போஸ்டர் - படம்: எக்ஸ் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவான ராமாயணா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா நேற்று (நவ. 5) உலகம் முழுவதும் வெளியானது. ராமாயணத்தைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அதிக பொருள்செலவில் உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனமான டினெக் பங்களிப்பில் ஆச்சரியப்படும் வகையில் எடுக்கப்பட்ட இந்த ராமாயணா திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அசத்தலாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள ராமாயணா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ. 77 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 127 கோடியும் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டும் ரூ. 47.50 கோடி வசூலித்து, ஹிந்தியில் அதிக வசூலை ஈட்டிய 'ஆதிபுருஷ்' (ரூ. 37.25 கோடி) திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த முதல் நாள் வசூலில் ஆதிபுருஷ் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது. ஆதிபுருஷ் திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ. 103.08 கோடி வசூலித்தது. முதல் நாளில் கன்னடத்தில் ரூ. 7.25 கோடியும், தெலுங்கில் ரூ. 6 கோடியும், தமிழில் ரூ. 2.60 கோடியும், மலையாளத்தில் ரூ. 1.50 கோடியும் ராமாயணா வசூலித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
ஆதிபுருஷ் வசூலை முந்தாத ராமாயணா! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗