மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்து பற்றி... விபத்துக்குள்ளான வேன் - Dinamani காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். மேலும், 8 பேர் கவலைக்கிடமான நிலையிலும், 10 பேர் காயங்களுடனும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் மாமல்லபுரத்திலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் பையனூர் கிராமப் பகுதியில் வந்த போது மாடு ஒன்று குறுக்கே வந்ததால் வேன் ஓட்டுநர் வேனை வேறு பாதைக்கு திருப்ப முயன்றபோது எதிரில் திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. விபத்துக்குள்ளான அரசு பேருந்து இந்த விபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த புலேந்திரன் மனைவி துர்காலட்சுமி (34), செய்யூர் தாலுகா கூவத்தூர் அருகே அடையாளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிவா மனைவி ஜெயலட்சுமி (40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களைத் தவிர செய்யாறு அருகே ஓதியூரை சேர்ந்த கனகராஜ் மகள் ஐஸ்வர்யா (25), தேன்பட்டிணம் குப்பம் ஞானசேகரன் மகள் ரெஜினா (33), முகையூர் கிராமம் கோவிந்தராஜ் மகள் உத்ரா(26), நயினார் குப்பத்தை சேர்ந்தவர்களான நந்தகுமார் மகள் ஐஸ்வர்யா (35), ராஜா மனைவி முத்துலட்சுமி (33), கூவத்தூர் அருகே பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி மனைவி சுதா (36), ராஜா மனைவி தனலட்சுமி (32) ஆகியோருக்கு தலையிலும், செய்யாறு தாலுகா வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தமிழ்வாணன் (26) இவருக்கு இடுப்பிலும் பலத்த காயம் ஏற்பட்டு, இவர்கள் 8 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களைத் தவிர 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗