ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி.. 40 சொகுசு வில்லாக்கள்.. அதே நிறுவனத்துக்கே வாடகை.. பின்னணியில் என்ன நடந்தது?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி.. 40 சொகுசு வில்லாக்கள்.. அதே நிறுவனத்துக்கே வாடகை.. பின்னணியில் என்ன நடந்தது?

ஜெய்ப்பூர்: ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து சொகுசு வில்லாக்களை வாங்கிய அரசு உயர் அதிகாரிகள், அதே நிறுவனத்திற்கே அவற்றை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த விவகாரம் கடந்த 2 நாட்களாகவே ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி தொடர்பான இந்த விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!! ராஜஸ்தான் முன்னாள் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிகர் அகர்வால், அவரது மனைவி பிரஷாகா மாத்தூர் ஆகியோரது குடும்பத்தினர், அனந்தா ரிசார்ட்ஸ் நடத்தும் கோயல் பேஷன் நிறுவனத்திடமிருந்து 40 சொகுசு வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கியிருக்கிறார்கள். கைமாறிய உடனேயே வாடகை ஒப்பந்தம் சந்தை விலையைவிட குறைவாக வாங்கிய இந்த சொத்துக்களை மீண்டும் அதே நிறுவனத்திற்கே விட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 கோடி வாடகை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த 40 சொத்துக்களில் 20 காட்டேஜ்கள் உதய்பூர் புஜ்தா பகுதியில் 2023 செப்டம்பரிலும், 20 வில்லாக்கள் அல்வார் அஜாப்கர் பகுதியில் 2026 மார்ச் மாதத்திலும் வாங்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக மொத்தம் ரூ.6.16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஷிகர் அகர்வால், அவரது மனைவி ஆகியோர் தலா 10 காட்டேஜ்களை வாங்கியுள்ளனர். அல்வாரில் 2 பேரின் பெயர்களிலும் தலா 4 வில்லாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல 2 மகன்கள் பெயரில் தலா 4 வில்லாக்களும், பிரஷாகா மாத்தூரின் பெற்றோர் பெயரில் தலா 2 வில்லாக்களும் வாங்கப்பட்டுள்ளன. மகன்கள் சார்பில் பிரஷாகா மாத்தூர் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 2026 ஜனவரி 7-ம் தேதி தாக்கல் செய்த சொத்து கணக்கில் ஷிகர் அகர்வால் 14 சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள் அவரது மனைவி தாக்கல் செய்த கணக்கில் தனக்கு சொத்துக்கள் இல்லை என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் பெயரில் 40 சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு ரிசார்ட் கட்ட அனுமதி கொடுப்பதில் விதிமுறைகள் மீறப்பட்டதா, தேவையான சான்றிதழ்களை வாங்காமலேயே அனுமதி கொடுத்தார்களா, அரசு தரப்பில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அக்டோபர் 29-ம் தேதியே ஷிகர் அகர்வால் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அக்டோபர் 31-ம் தேதி அவரது மனைவி பிரஷாகா மாத்தூரும் கூடுதல் டிஜிபி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 2 பேரும் இப்போது காத்திருப்போர் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது...!!!

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை