முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "அமைச்சரவை கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் அது முடிந்தபிறகு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக நீதி ஆணையம் அமைத்து கணக்கெடுப்பு நடைபெறும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழம்பூர் கிராம மக்களுக்கு அவர்களின் நிலம் ஒப்படைக்கும் பொருட்டு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமிற்கோ மதம் மாறினால் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்களை வழங்கினார். மக்களின் தேவையறிந்து செயல்படவும் அவர்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்" என்றார். மேலும் பேசிய அவர், "பேராசிரியர் கலையரசனை அலைக்கழித்தது தவறுதான். அதுகுறித்து அவரிடம் விளக்கம் தெரிவித்துவிட்டோம். அமைச்சர்கள் மாட்டிக்கொண்டால் யாரும் கேள்வி கேட்க கூடாதா? நடவடிக்கை எடுக்க கூடாதா? அவர்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டுமா? பள்ளிகளை மிரட்டிப் பணம் பறித்ததற்காக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗