அமெரிக்க ஆளுநராக முதல் கருப்பின பெண் வெற்றி பெற்றிருப்பது பற்றி... கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் - AP அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜார்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள வாக்குகளில் 54.2 சதவிகித வாக்குகளை கீஷா லான்ஸ் பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளரும் தொழிலதிபருமான ரிக் ஜாக்ஷன் 45.8 சதவிகித வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். ஜார்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்க ஆளுநராக முதல் கருப்பின பெண் வெற்றி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗