இது ஏற்கனவே ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவாக உருவெடுத்து வருகிறது. அந்தக் கட்சி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதுடன், செனட்டின் கட்டுப்பாட்டையும் தங்கள்வசப்படுத்தும் பாதையில் முன்னேறி வருகிறது. செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தனது முதல் அதிர்ச்சி வெற்றியைப் பதிவு செய்தது. முன்னாள் செனட்டர் லிண்ட்ஸி கிரஹாமின் மரணத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த டார்லின் கிரஹாமை அன்னி ஆண்ட்ரூஸ் தோற்கடித்தார். சில மாதங்களுக்கு முன்புவரை கூட, அந்தத் தொகுதி கடுமையான போட்டி நிலைக்கு வரும் என்று மிகச் சில அரசியல் ஆய்வாளர்களே கருதினர். ஒரு வருடத்திற்கு முன்பு கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளாகக் கருதப்பட்ட இரண்டு செனட் தேர்தல்கள், ஜனநாயகக் கட்சிக்கு மிக எளிதான வெற்றிகளாக மாறியுள்ளன. அவை ஜார்ஜியாவில் ஜான் ஒசாஃப்பின் மறுதேர்வு வெற்றியும், வட கரோலினாவில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காலியான செனட் இடத்தையும் உள்ளடக்கியவை. வட கரோலினா போட்டியில், முன்னாள் ஜனநாயகக் கட்சி ஆளுநர் ராய் கூப்பர், குடியரசுக் கட்சியின் முக்கிய நிர்வாகியான மைக்கேல் வாட்லியை தோற்கடித்தார். செனட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு ஜனநாயகக் கட்சிக்கு தேவையான நான்கு கூடுதல் இடங்களில் இதுவே முதல் வெற்றியாகும். தெற்கு கரோலினாவையும் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் இலக்கின் பாதி தூரத்தை எட்டியுள்ளனர். இப்போது கவனம், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள டெக்சாஸ், கான்சாஸ் மற்றும் ஓஹையோ மாநிலங்களின் செனட் இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கைகள் மீது திரும்பியுள்ளது. பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், டெக்சாஸ் மற்றும் கான்சாஸ் மாநிலங்களின் செனட் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான நிலை இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை தற்போதைய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் கிரெக் ஆபட் மிக வலுவான வெற்றியாளராகக் கருதப்பட்ட டெக்சாஸ் ஆளுநர் தேர்தல், தற்போது வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்று கணிக்க முடியாத நெருக்கடியான போட்டியாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு முக்கியமான தேர்தல் போட்டிகளைப் பார்க்கும்போது, இதற்கான காரணங்கள் பல தென்படுகின்றன. ஃப்ளோரிடாவில், மாநில சட்டமன்றத்தில் இருந்த குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்து, அவற்றை வெல்வதைத் தங்களுக்கு மிகவும் எளிதாக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அந்த மூன்று தொகுதிகளையும் இழந்துவிட்டனர். மாநிலத்தின் பிற பிரதிநிதிகள் சபைத் தேர்தல்களிலும், குடியரசுக் கட்சியினர் சுலபமாக வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்கள் கடுமையான போட்டிகளாக மாறியுள்ளன. உதாரணமாக, மேற்கு வட கரோலினா மற்றும் கென்டக்கியில் காலியாக இருந்த தொகுதிகளை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும், விர்ஜினியா மற்றும் இந்தியானா மாநிலங்களிலும் கூடுதல் வெற்றிகளைப் பெறுவதற்கான சாதகமான நிலையில் உள்ளது. குறிப்பாக தெற்கு மாநிலங்களில் கறுப்பின வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுக் கட்சியை ஆதரித்த ஃப்ளோரிடாவின் ஹிஸ்பானிக் வாக்காளர்களை மீண்டும் தங்கள் பக்கம் திருப்பியிருப்பதும், ஜனநாயகக் கட்சியின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
அமெரிக்க இடைக்கால தேர்தல்: குடியரசுக் கட்சிகளின் கோட்டைகளுக்குள் தடம் பதித்த ஜனநாயக கட்சியினர்