அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: செனட் சபையை இழந்தது ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: செனட் சபையை இழந்தது ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி

ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள். வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி செனட் சபையை இழந்துள்ளது. அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நவம்பர் 3 நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று (நவ.4) அதிகாலை முதலே முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 மக்களவை இடங்களுக்கும், 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கும், 36 மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் தேர்ந்தெடுக்கவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, பிரதிநிதிகள் சபை எனப்படும் மக்களவையில் 435 இடங்களில் ஜனநாயகக் கட்சி 181 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. செனட் சபையில் 51 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி வசம் இப்போது 39 இடங்கள் மட்டுமே உள்ளன. இந்தத் தேர்தலில் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனினும் இந்த இடைக்காலத் தேர்தல் முடிவுகள் ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இந்த முடிவுகள் ஆட்சியின் எஞ்சிய காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஜனநாயகக் கட்சியின் கைகளில் கூடுதல் அதிகாரம்: அமெரிக்க செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியதன் மூலம், அரசின் திட்டங்கள், நிர்வாக முடிவுகள், அரசின் செலவினங்கள் ஆகியவற்றை ட்ரம்ப் இனி தன்னிச்சையாக செய்ய முடியாது. அவற்றை எதிர்க்கவும் கண்காணிக்கவும் ஜனநாயகக் கட்சியால் முடியும். அதுமட்டுமல்லாது அதிபரின் முக்கிய நியமனங்களுக்கு ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ட்ரம்ப் அதிபரான பின்னர், தீவிர வரி விதிப்புகள் (Tariffs) மற்றும் ஈரானுடனான போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. இது வாக்குப்பதிவில் பிரதிபலித்திருக்கிறது என்று நிபுணர்கள், ஊடகங்கள் கூறுகின்றன. ட்ரம்ப் திட்டவட்டம்.. ஆனால் இடைக்கால தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக அமையாவிட்டாலும் அதிகாரம் தனக்கே என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.” என்று கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபருக்கு என சில வீட்டோ (veto) அதிகாரங்கள் உண்டு. அதைப்பயன்படுத்தி அவர் சில முடிவுகளை எடுக்க முடியும். அதனைக் கருத்தில் கொண்டே அதிபர் ட்ரம்ப் இவ்வாறாகப் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அரசியல் உண்டாகும் மாற்றம்? இந்த 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டையும் கைப்பற்றியதால், வாஷிங்டனின் அதிகார மையம் தலைகீழாக மாறும். ட்ரம்ப் நிர்வாகத்தின் தாராளமயமாக்கல் கொள்கைகள், வரித்தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடற்ற வர்த்தகச் சூழலை அனுபவித்து வந்த தனியார் ஈக்விட்டி (Private Equity) நிறுவனங்களும் பெரு வங்கிகளும் இப்போது கவலையில் ஆழ்ந்துள்ளன. கார்ப்பரேட்களின் பண பலம், வரித் தளர்வு முறைகேடுகள் மற்றும் கட்டுப்பாடற்ற நிதி முதலீடுகள் மீது விசாரணைகள் நடத்தப்படலாம். செயற்கை நுண்ணறிவு துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், கட்டுப்பாடற்ற சுதந்திரம், ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட வேலையிழப்பு, காளான்கள் போல் பெருகிவரும் டேட்டா சென்டர்களால் (Data Centers) ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் மின்தட்டுப்பாடு குறித்து ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி விசாரணை நடத்தக்கூடும். சிலிக்கான் வேலிக்கும் சிக்கல் குறிப்பாக சிலிக்கான் வேலியின் பெருநிறுவனங்களான மெட்டா (Meta), கூகுள் (Google), ஓபன் ஏஐ (OpenAI), அமேசான் (Amazon), ஆப்பிள் (Apple), டெஸ்லா (Tesla) மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) ஆகியவற்றின் தலைவர்கள், அதிபர் ட்ரம்ப் உடன் நெருக்கமாக இருந்து பல்வேறு சலுகைகளைப் பெற்றது குறித்த விசாரணைக்குள் கொண்டுவரப்படலாம்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை