அம்பாசமுத்திரம்: பொது வேட்பாளராக சீமான்?

📅 📍 Tiruppur, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அம்பாசமுத்திரம்: பொது வேட்பாளராக சீமான்?

இரு கட்சிகளின் ஆதரவு கிடைத்தும் சீமானால் வெற்றி பெற முடியாவிட்டால், தமிழகத்தின் மிகப்பெரிய சக்தி தவெக என்பதை உறுதிப்படுத்தியது போல் ஆகிவிடும். சீமான் - கோப்புப் படம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளர் ஆக வாய்ப்பிருக்கிறதா என்பது பேசுபொருளாகியுள்ளது. அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தீர்ப்பு விரைவில் வெளியாகக்கூடும் எனக் கருதப்படுவதால், இடைத்தேர்தலும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகவும், அனைத்து சமூகத்துக்கான பொது வேட்பாளர் 'நான்தான்' என்றும் சீமான் அறிவித்திருப்பது அரசியல் களத்தைச் சூடேற்றியுள்ளது. திராவிட கட்சிகளின் ஆதரவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற சீமான் தயாராக இருக்கிறார் என்பதாகவே அவரது அறிவிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியும் உடனடியாக சீமானின் அறிவிப்பை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முடிவெடுக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். திமுக ஆதரிக்குமா?: தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளர் கார்த்திகாவை காவல் துறையினர் கைது செய்ததற்கு திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து சீமானும் அறிக்கை வெளியிட்டார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்துவரும் நாதகவுக்கு ஆதரவாகவும், தவெகவை விமர்சித்தும் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டது பேசுபொருளானது. திமுக-நாதக கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வியும் எழுந்தது. அம்பாசமுத்திரத்தில் சீமானை ஆதரித்து, திமுக போட்டியிலிருந்து விலகினால், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்வடையக்கூடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. மாறாக, திமுக போட்டியிட்டு, அதிமுக சீமானை ஆதரித்துவிட்டால் மும்முனைப் போட்டி என்ற நிலை உருவாகிவிடும். அது திமுகவுக்கு ஒரு சவாலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. பெரியார், கருணாநிதி ஆகியோரை கடும் விமர்சனம் செய்துவரும் சீமானை ஆதரித்தால் திமுகவின் அடிப்படை வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற தயக்கமும் திமுகவுக்கு இருக்கிறது. 2029 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் நாதகவும் சேரும்போது அது திமுகவின் தேர்தல் வாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இடைத்தேர்தல் மட்டுமன்றி, 2029 மக்களவைத் தேர்தலில் ஏற்படப்போகும் லாப, நஷ்டத்தை சேர்த்தே கணக்குபோட வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது. 2026 பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் (தேமுதிகவை தவிர்த்து) இப்போது தவெக பக்கம் சென்றுவிட்டன. 2029-தேர்தலின்போது அவை மீண்டும் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். அதேபோல, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக போன்ற கட்சிகளும் பாஜகவைவிட்டு விலகி திமுக கூட்டணிக்குச் செல்வதும் சந்தேகமே. இந்நிலையில், 15 ஆண்டுகளாக தொடர்ந்து தனித்து நின்று ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் சீமானை ஆதரித்தால், 2029 தேர்தலில் திமுக கூட்டணிக்கு நாதக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக ஏற்குமா?: அதிமுகவை பொருத்தவரை கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக வென்ற தொகுதி என்பதால் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதில் தவிர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், சீமானை திமுக ஆதரித்தால், அது அதிமுகவுக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்தத் தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கு மிக்க நிர்வாகியாக இருந்த இசக்கி சுப்பையா தவெகவுக்கு சென்றுவிட்டது, அதிமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலைப் பொருத்தவரை சீமானுக்கு அளிக்கும் ஆதரவு 2029 மக்களவைத் தேர்தல் கூட்டணிக் கணக்கை நிர்ணயிக்கும் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில், இரு கட்சிகளும் ஆதரித்து சீமான் வெற்றி பெற்றால், அவரது சட்டப்பேரவை பிரவேசம், இரு கட்சிகளுக்கும் புதிய சவாலாக உருவெடுக்கக்கூடும். இரு கட்சிகளின் ஆதரவு கிடைத்தும் சீமானால் வெற்றி பெற முடியாவிட்டால், தமிழகத்தின் மிகப்பெரிய சக்தி தவெக என்பதை உறுதிப்படுத்தியது போல் ஆகிவிடும். இத்தகைய சூழலில், வேட்பாளரை நிறுத்துவதா அல்லது பொது வேட்பாளராக சீமானை ஆதரிப்பதா என்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுப்பது குறித்து இரு கட்சித் தலைவர்களும் மிகக் கவனமாக ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போதுதான் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவரும். சீமானைப் பொருத்தவரை நஷ்டப்பட ஏதுமில்லை. பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவரது செல்வாக்கு அதிகரிப்பதுடன், தமிழக அளவில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் அளவுக்கு இல்லாவிட்டாலும், உதயநிதி, வைகோ, திருமாவளவன், அன்புமணி போன்றவர்களுக்கு நிகரான தலைவராக அவர் உயரக்கூடும். பொது வேட்பாளராக சீமானை மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா என்பது இருக்கட்டும். உருமாறிவிட்ட அரசியல் சூழலில், தனித்துக் களமிறங்கினால் கடந்த முறை வாங்கிய வாக்குகளையேகூட அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதே சந்தேகம்தான். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை