அப்பா குட்டி படத்தின் ‘ஏன் இந்த பெண்ணுக்க’ பாடல் வெளியானது குறித்து... அப்பா குட்டி படத்தின் பாடல் வெளியீடு - படம் - எக்ஸ் அப்பா குட்டி படத்தின் இரண்டாவது பாடலான ’ஏன் இந்த பெண்ணுக்கு’ பாடல் செவ்வாய்க்கிழமை (நவ. 3) வெளியானது. இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த பாடல் இன்று வெளியானது. மேலும், படமானது வரும் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்பா குட்டி படத்தின் ‘ஏன் இந்த பெண்ணுக்கு’ பாடல் வெளியீடு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗