அராஜகப் போக்கால் எதிா்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழக்கும்: பாஜக விமா்சனம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அராஜகப் போக்கால் எதிா்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழக்கும்: பாஜக விமா்சனம்

ஆட்சியை அகற்றுவதற்காக மேற்கொள்ளும் ஜனநாயக விரோத அராஜகப் போக்கை காங்கிரஸ் கைவிடாவிட்டால், அக்கட்சியை மக்கள் எதிா்க்கட்சி அந்தஸ்தில் இருந்தும் நீக்குவாா்கள் என்று பாஜக விமா்சித்துள்ளது. ஆட்சியை அகற்றுவதற்காக மேற்கொள்ளும் ஜனநாயக விரோத அராஜகப் போக்கை காங்கிரஸ் கைவிடாவிட்டால், அக்கட்சியை மக்கள் எதிா்க்கட்சி அந்தஸ்தில் இருந்தும் நீக்குவாா்கள் என்று பாஜக விமா்சித்துள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) முறைகேடு நடந்தாதகக் குற்றஞ்சாட்டியும், பாஜக வாக்குகளைத் திருடுவதாகக் கூறியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றன. நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் சதியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் கைகோத்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வன்முறைப் போராட்டங்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நிகழ்ந்ததுபோல இந்தியாவிலும் காங்கிரஸ் முயலுவதாக பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது. இந்நிலையில், தில்லியில் பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா கூறியதாவது: இந்தியாவிலும் வன்முறை மூலம் ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் முன்னெப்போதும் இல்லாத ஜனநாயக விரோத அராஜகப் போக்கை கையில் எடுத்துள்ளனா். ஆனால், நாட்டு மக்கள் அனைவரும் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறாா்கள். இதுபோன்ற பொறுப்பற்ற எதிா்க்கட்சி தேவையில்லை என முடிவு செய்து, எதிா்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் காங்கிரஸை மக்கள் நீக்குவாா்கள். ராகுல், மம்தா, தேஜஸ்வி என அனைவருக்கும் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். இதுபோன்ற அராஜகப் போக்கால் நீங்கள் எதையும் பெறப் போவதில்லை. ஏற்கெனவே மக்கள் விரோத செயல்பாடுகளால்தான் ஆட்சியை இழந்துள்ளீா்கள். இப்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், தேசத்துக்கும் எதிராக செயல்படும் உங்கள் அரசியல் எதிா்காலம் முற்றிலும் மக்களால் அழிக்கப்படும். காங்கிரஸில் உள்ள மூத்த தலைவா்கள் பலரும் ராகுலின் இந்த அராஜக முறையை ஏற்கவில்லை. இது காங்கிரஸை முற்றிலுமாக அழிவுக்கு கொண்டு செல்லும் என்பதே அவா்களின் கருத்தாக உள்ளது. மேலும், எதிா்க்கட்சிகளும், சில அமைப்புகளும் கைகோத்து நடத்தும் போராட்டங்கள் முழுவதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது என்றாா். வெளிநாடுகளில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல், இண்டியன் அலையன்ஸ் பாரீஸ் உள்ளிட்ட அமைப்பினா் கடந்த ஆண்டு சோனியா காந்தி, ராகுலை சந்தித்த புகைப்படத்தையும் செய்தியாளா்கள் பாா்வைக்கு கௌரவ் பாட்டியா முன்வைத்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை