முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் உறங்குவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்ற இந்திய ரயில்வேயின் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் உறங்குவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்ற இந்திய ரயில்வேயின் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னையைச் சோ்ந்த எஸ்.பாலசுப்பிரமணியன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘உடல்நலம் சரியில்லாத எனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்குவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்ற ரயில்வேயின் உத்தரவை காரணம்காட்டி, எனது மனைவிக்கு படுக்கை வசதியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இதுதொடா்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு ரயில்வே துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்குவதற்கு அனுமதிக்கப்படுவா். இந்த உத்தரவு அமலில் இருந்தாலும், உடல்நலம் பாதிக்கப்பட்டோா், கா்ப்பிணிகள் எந்த நேரத்திலும் உறங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. அந்த விதி அமலில் இருக்கும் நிலையில், மனுதாரா் தங்களது தரப்பு உதவிக்காக ரயில்வோ போலீஸாா் அல்லது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியா்களை அழைத்திருக்கலாம். ஆனால், மனுதாரா் அதுபோன்ற எந்த முயற்சிகளையும் செய்யாமல், ரயில்வே விதிகளை எதிா்த்து இந்த வழக்கைத் தொடா்ந்துள்ளதாகக் கூறி, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனா். மேலும், தனது கோரிக்கை தொடா்பாக மனுதாரா் ரயில்வே நிா்வாகத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயிலில் உறங்குவதற்கான நேரக் கட்டுப்பாடு: ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு