அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு. முதல்வர் விஜய் - IANS போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC. BC(M), MBC & DNC, SC, ST) ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும். உயர்த்தப்படும் வயது உச்சவரம்பு - குரூப் 1 தேர்வுக்கு... பொதுப்பிரிவினர் - 32ல் இருந்து 37 வயதாக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டு பிரிவினர் - 37ல் இருந்து 42 ஆக உயர்த்தப்படுகிறது. இதுவே மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுப்பிரிவினர் - 42ல் இருந்து 47 ஆகவும் ஒதுக்கீட்டு பிரிவினர் - 47ல் இருந்து 52 ஆகவும் உயர்த்தப்படுகிறது. குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுக்கு... பொதுப்பிரிவினர் - 30ல் இருந்து 35 வயதாகவும் ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுப்பிரிவினர் - 40ல் இருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல குரூப் 4 தேர்வுக்கும் 3 பிரிவுகளில் தனித்தனியாக வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗