அரசுப் பணிக்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டுகள் அதிகரிப்பு: எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு வயது வரம்பு உயர்வு?

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
அரசுப் பணிக்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டுகள் அதிகரிப்பு: எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு வயது வரம்பு உயர்வு?

சென்னை: அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை, மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், வயது வரம்பு முடியும் நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள். தமிழக அரசுப் பணிகளுக்குத் தேவைப்படும் அலுவலர்கள், ஊழியர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், துணை ஆட்சியர், டிஎஸ்பி, உள்ளிட்ட பதவிகளுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. நகராட்சி ஆணையர் (கிரேடு-2,), சார்-பதிவாளர்,தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-2,2ஏ தேர்வும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப்-4 தேர்வும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொருபோட்டித் தேர்வுக்கும் பொதுப் பிரிவினருக்கும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் உள்ளது. அதேபோல், குரூப்-2, 2ஏ தேர்வுக்கு வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆக உள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. குரூப்-4 தேர்வுக்கும், தொழில்நுட்பத் தேர்வுகளுக்கும் வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை அவர்களுக்குக் கூடுதலாக 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அரசுப் பணிகளுக்கு ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாததால் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தேர்வர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசுப் பணிக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பைத் தற்போதைய விதிகளில் இருப்பதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி, ஆதரவற்ற கணவனை இழந்தவர்கள்) ஏற்கெனவே உள்ள வயது சலுகைகளுடன் கூடுதலாக அமையும். குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உட்பட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இந்த வயது வரம்பு உயர்வு பொருந்தும். குரூப்-1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 32-ல் இருந்து 37 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-ல் இருந்து 42 ஆகவும் உயரும். குரூப்-2, 2ஏ தேர்வில் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30-ல் இருந்து 35 ஆக அதிகரிக்கும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கெனவே இருந்து வருவதைப் போல் வயது உச்ச வரம்பு இல்லை. குரூப்-4 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30-ல் இருந்து 35 ஆக உயரும். இடஒதுக்கீட்டு பிரிவினரில் பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி வகுப்பினருக்கு 32-ல் இருந்து 37 ஆக அதிகரிக்கும். எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி வகுப்பினர் மற்றும் ஆதரவற்ற கணவனை இழந்தவர்களுக்கு 35-ல் இருந்து 40 ஆகவும் உயரும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் வயது வரம்பு கிடையாது. மாற்றுத் திறனாளிகளுக்குத் தற்போதைய விதிமுறையின்படி, கூடுதலாக 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இந்த வயது உச்ச வரம்பு இந்த ஆண்டு அக்டோபர் 30 முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். தமிழக அரசின் இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடியும் நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கரோனா காலக்கட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படாததால் கடந்த 2021-ம் ஆண்டு 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டிருந்தது. அதுவும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டு அதற்கான காலக்கெடு 2026 செப்டம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. காலி இடங்களை நிரப்ப வலியுறுத்தல்: அரசுப் பணியில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதை அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதே நேரத்தில் அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார் கூறும்போது, ‘‘வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி இருப்பதை வரவேற்கிறோம். வயது வரம்பு விளிம்பில் இருப்பவர்களுக்கு இது பலன் அளிக்கும். இதனால் பெரிய அளவில் மாற்றம் வந்துவிடாது. அரசு துறைகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கின்றன. ஆனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் வெறும் 5 ஆயிரம், 10 ஆயிரம் என்ற அளவில்தான் காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதிகப்படியான காலி இடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்திருப்பதை வரவேற்கலாம். அதேரத்தில், அரசு துறைகளில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கும் போது அவற்றை நிரப்பாமல் வெறுமனே வயது வரம்பை அதிகரிப்பதால் என்ன பயன்? குரூப்-சி, குரூப்-டி பணி இடங்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்க அரசு முயற்சி செய்வது எந்த வகையில் நியாயம்?’’ என்று தெரிவித்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை