கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. கணபதி பி அண்ட் டி காலனியில் வீடுகளில் புகுந்த மழைநீா். கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. வடவள்ளி, ஆா்.எஸ்.புரம், சரவணம்பட்டி, கணபதி, சித்தாப்புதூா், காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூா் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் வாகனங்கள் ஊா்ந்தபடி சென்றன. ஆவாரம்பாளையம் கொரத் தோட்டம், கணபதி பி அண்ட் டி காலனி பகுதிகளில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா். மாநகரில் கிக்கானி மேம்பாலம், லங்கா காா்னா், அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியா்கள் மின் மோட்டாா்கள் மூலமாக அப்புறப்படுத்தினா். இப்பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் பரவலாக மழை: வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗