“ஈரான் மீண்டு வர 20+ ஆண்டுகளாகும்” - ட்ரம்ப் திட்டவட்டம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“ஈரான் மீண்டு வர 20+ ஆண்டுகளாகும்” - ட்ரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஏற்கனவே பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாடு மீண்டும் பழைய நிலைக்கு மீண்டு வர 20 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், முடிந்தவரை ஈரான் நாட்டின் மீதமுள்ள பகுதிகளை அழிக்காமல் இருக்கவே தாம் விரும்புவதாகவும், ஆனால் சூழலுக்கு ஏற்ப ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இடைத்தேர்தலுக்கு முன் இதுகுறித்துத் தெளிவான பதிலை அளிக்காத ட்ரம்ப், தற்போது ஈரானை கையாள அமெரிக்கப் படைகள் எப்போதும் முழுத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானுடனான போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து, இடைத்தேர்தலில் குடியரசு கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்ட ட்ரம்ப், இருப்பினும் அணுஆயுதங்களை ஈரான் தயாரிப்பதைத் தடுப்பதற்கு இந்த போர் நடவடிக்கை மிகவும் அவசியமானது என்றும் கூறியுள்ளார். மேலும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை பதவியிலிருந்து நீக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், அவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெறக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை