அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது குறித்து ஈரான் கருத்து... அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையின் பிரதிபலிப்பு என ஈரான் அரசு கூறியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, கடந்த நவ. 3 மாலை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ. 4) காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்ததுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து, ஜனநாயகக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், மனசாட்சி அல்லது விலைவாசி உயர்வு ஆகியவற்றால் போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என ஈரானின் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் பதிவிட்டுள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மனசாட்சியோ அல்லது விலைவாசி உயர்வோ, அமெரிக்கர்கள் போர் வேண்டாம் எனக் கூறியிருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அமெரிக்க அரசு, சர்வதேச அளவில் பணம் கொடுப்பவர்களுக்கும் மிரட்டிப் பணம் பறிப்பவர்களுக்கும், சேவை செய்ய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டால், வேண்டாம் எனும் பதிலே அவர்களுக்குக் கிடைக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
தேர்தல் முடிவுகள்! போருக்கு எதிரான அமெரிக்கர்களின் பிரதிபலிப்பு! - ஈரான் கருத்து
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗