இந்த தவளையை தடுக்க ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்படுவது ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
இந்த தவளையை தடுக்க ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images ரியோ டின்டோ நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் விஷத்தன்மை கொண்ட கேன் டோட் தவளை (cane toad) பரவுவதைத் தடுக்கப் பல மில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது. அங்கு இந்தச் சுரங்க நிறுவனத்துக்குப் பெரிய இரும்புத் தாது சுரங்கங்கள் உள்ளன. கேன் டோட் (Cane toad) என்பது தவளை இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுத்தன்மை கொண்ட உயிரினம். பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, இந்த தவளை தெற்குப் பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க 28 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை (சுமார் ரூ 185 கோடி) செலவிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் 'தவளை தடுப்பு மண்டலம்' ஒன்றை உருவாக்கவுள்ளது. இந்த தவளை ரியோ டின்டோ நிறுவனத்தின் தொழிலுக்கு நேரடியாக அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், இதன் விஷம் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு வனவிலங்குகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியவை. மேலும், பில்பரா பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. பில்பரா பகுதியில் இரும்புத் தாதுக்காக, பழங்குடியின மக்களின் புனிதமான இரண்டு பாறைத் தங்குமிடங்களை அழித்ததாக ரியோ டின்டோ நிறுவனம் ஏற்கெனவே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்த முடிவால், நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தனது பதவியை இழந்தார். மேலும், இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், பழங்குடியின சமூகங்களுடனான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ரியோ டின்டோ உறுதியளிக்கவும் வழிவகுத்தது. இந்தத் தடுப்பு மண்டலம் குறித்து ஆஸ்திரேலியாவின் நியாங்குமார்ட்டா வார்ரன் பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பணியாற்றும் வனப் பாதுகாவலர் ரொபர்ட்டா ஹண்டர்,"இந்த தவளைகள் நீர்நிலைகளையும் விலங்குகளையும் அழிக்கின்றன. இவை எங்கள் நிலப்பகுதியை நெருங்கும்போது, அவற்றைத் தடுத்து நிறுத்த நாங்கள் அங்கே இருக்க விரும்புகிறோம். ஏனெனில், எங்கள் நிலம் அழிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார். கிரேட் சாண்டி பாலைவனத்துக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே உள்ள 7,500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் தடுப்பு அமைத்து, இந்த தவளைகளுக்கான நீர் ஆதாரங்களைத் துண்டிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். End of அதிகம் படிக்கப்பட்டது வறண்ட காலங்களில், இந்த தவளைகள் உயிர்வாழ சில நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தேவைப்படுகிறது. இயற்கையான நீர் ஆதாரங்கள் இல்லாதபோது, கால்நடைகளுக்காகவும் பாசனத்துக்காகவும் உருவாக்கப்பட்ட செயற்கை நீர் ஆதாரங்களை இவை நம்பியுள்ளன. அணைகள், நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரைமட்டத்தில் உள்ள பிற நீர் ஆதாரங்களை தவளைகள் அணுகுவதைத் தடுப்பதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். ஐந்து ஆண்டுகள் நடைபெறவுள்ள இந்தத் திட்டம் 2027-ஆம் ஆண்டு தொடங்கும். இந்த தவளைகள் பில்பரா பகுதிக்குள் நுழைந்தால், அங்குள்ள பல உள்நாட்டு விலங்கினங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எண்ணிக்கை குறைந்து வரும் வடக்கு குவால், கோவானா உடும்பு மற்றும் கோஸ்ட் பேட் ஆகியவை இதில் அடங்கும். கரும்புத் தோட்டங்களில் வண்டுகளைக் கட்டுப்படுத்துவதற்காக 1935-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்த தவளைகள் கொண்டுவரப்பட்டன. பட மூலாதாரம், Getty Images அதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் இந்த தவளைகள் மெதுவாக மேற்கு நோக்கிப் பரவி வருகின்றன. ஆண்டுக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வரை இவை நகர்ந்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தவளைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வேட்டையாடும் உயிரினங்களோ, நோய்களோ இல்லை. தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இவை விஷத்தை பயன்படுத்துகின்றன. கர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் பென் பிலிப்ஸ், "உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இந்த தவளைகள் பில்பரா பகுதியை அடைந்துவிடும்" என்றார். மேலும் அவர், "உலகின் மிக மோசமான அக்கிரமிப்பு உயிரினங்களில் ஒன்றின் பரவலைத் தடுத்து நிறுத்தவும், இந்தப் பகுதியின் தனித்துவமான வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் கிடைத்துள்ள வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை