இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு... நடிகர்கள் நாசர், ஸ்ரீஜா ரவி மற்றும் ரெஜினா கேசண்ட்ரா - Instagram இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சில நேரங்களில் சில மனிதர்கள்” மற்றும் “பாம்” ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விஷால் வெங்கட். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகர்கள் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, படக்குழுவினர் இன்று (நவ. 4) சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். புதுமையான கதைகளத்தில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு, மாமன் படத்தின் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! பெயர் என்ன?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗