டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து... டிஎன்பிஎஸ்சி - பிரதிப் படம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை (நவ. 4) நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. இத்தேர்வு மூலமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. டிஎன்பிஎஸ்சியின் நடப்பு ஆண்டு அட்டவணைப்படி, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அக். 6 முதல் நவ. 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவ. 8 ஆம் தேதி இரவு 11.59 வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்வானது, அடுத்த ஆண்டு ஜன.10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗