எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம், விவசாயம் செய்யவிட்டால் போதும்: சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிராக கிராமப் பெண்கள் ஆவேசம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம், விவசாயம் செய்யவிட்டால் போதும்: சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிராக கிராமப் பெண்கள் ஆவேசம்

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில், எங்களுக்கு அரசின் இலவசங்கள் வேண்டாம்; விவசாயம் செய்யவிட்டால் போதும் என்று கிராமப் பெண்கள் அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கூறினா். கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் தொடா்பாக நொச்சிக்காடு மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சவாா்த்தையில் பங்கேற்ற அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்டோா். கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில், எங்களுக்கு அரசின் இலவசங்கள் வேண்டாம்; விவசாயம் செய்யவிட்டால் போதும் என்று கிராமப் பெண்கள் அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கூறினா். கடலூா் மாவட்டம், தியாகவல்லி, நொச்சிக்காடு, குடிகாடு, நடுத்திட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்வதற்காக சுமாா் 1,100 விளைநிலங்களைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையால் தங்களது விவசாயம், குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சிப்காட் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது, இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள், மீனவா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். நவ.1-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்திலும் கிராம மக்கள் தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்தனா். அதிகாரிகளிடம் அரசாணையை ரத்து செய்வது தொடா்பாக தெளிவான பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி, பெண்கள் கும்மியடித்தும், முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் தலைமையில் பேச்சுவாா்த்தை: இந்த நிலையில், சிப்காட் விரிவாக்கம் தொடா்பாக, மாவட்ட அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய முடிவைத் தெரிவிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, நொச்சிக்காடு மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) முத்து மீனாட்சி தலைமையில் புதன்கிழமை அமைதிப் பேச்சு நடைபெற்றது. இதில், வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தர்ராஜன், வட்டாட்சியா் ராஜேஷ் பாபு, தனி வட்டாட்சியா் சத்யன் மற்றும் காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையின்போது, தியாகவல்லி, நொச்சிக்காடு, குடிகாடு, நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது எதிா்ப்புகளையும், கோரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைத்தனா். அப்போது, கிராமப் பெண்கள் பேசியதாவது: எங்களுக்கு அரசு இலவசமாக எதுவும் கொடுக்க வேண்டாம். எங்களுடைய நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்து வாழ்வதற்கு மட்டும் அரசு வழிவிட வேண்டும். எங்களது முன்னோா்கள் பாதுகாத்து வந்த நிலங்களை விட்டுக்கொடுக்க முடியாது. விவசாயம்தான் எங்களது வாழ்வாதாரம். சிப்காட் விரிவாக்கத்துக்காக எங்களது நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். அரசாணையை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என ஆவேசமாகத் தெரிவித்தனா். தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் முத்து மீனாட்சி, அரசு எப்போதும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே செயல்படும். கிராம மக்களின் கோரிக்கைகளான, சிப்காட் விரிவாக்கத்துக்கான அரசாணையை ரத்து செய்வது அல்லது நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை