டிரம்பை போட்டு பங்கம் செய்யும் ஈரான்.. தேர்தல் தோல்வியால் செம ஹேப்பி.. வெந்த புண்ணில் வேலை வீசுறாங்க

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
டிரம்பை போட்டு பங்கம் செய்யும் ஈரான்.. தேர்தல் தோல்வியால் செம ஹேப்பி.. வெந்த புண்ணில் வேலை வீசுறாங்க

தெஹ்ரான்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் டொனால்டு டிரம்பின் குடியரசுக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஈரான் போர் விவகாரம் டிரம்பின் இந்த சறுக்கலுக்கு காரணம் என்று கணிப்புகள் கூறும் நிலையில், டிரம்ப் தோல்வியால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஈரான், சமூக வலைத்தளங்களில் நையாண்டி செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்து இருப்பதை பிற நாடுகளை விட ஈரான் அதிகம் கொண்டாடி வருகிறது. ஏன் அமெரிக்கர்களை விட அதிகம் கொண்டாடுவது ஈரான் தான் என சொல்லும் அளவிற்கு நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறது. ஈரான் தூதரகும், டிரம்பை கலாய்த்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது. கலாய்த்து போட்ட வீடியோ இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள ஏஐ வீடியோவில், "நான்கு நபர்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போன்ற் தோற்றத்துடன் உருவாக்கப்பட்ட ஒருவரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று ஆபத்தான கழிவு பொருட்கள் என்று எழுதப்பட்ட வேஸ்ட் தொட்டிக்குள் வீசுகிறார்கள். இந்த வீடியோவுடன் அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் என்று பதிவிட்டு ஸ்மைலி எமோஜியையும் பதிவிட்டுள்ளது. டிரம்ப் கட்சி தோல்வி அடைந்ததை கிண்டல் செய்து ஈரான் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தாக்குதல் நடத்தினர். 8 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா - ஈரான் போர் நீடித்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். The U.S. midterm elections 😄 https://t.co/KDm874Cb1f இதனையடுத்து ஈரானும் கடுமையான பதிலடியை தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் சர்வதேச அளவில் எண்ணெய் போக்குவரத்து முடங்கியது. ஈரானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த போர் அமைந்துள்ள நிலையில், டிரம்பை ஈரான் கலாய்த்து தள்ளியுள்ளது. அமெரிக்க இடைக்கால தேர்தலிலும் தோற்றாலும் ஈரான் மீதான நடவடிக்கையை நிறுத்தப்போவது இல்லை என்பதையே டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதனால், தேர்தல் முடிவுகள் ஈரான் - அமெரிக்கா போரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது. இதற்கிடையே, டிரம்ப் கட்சி தோல்வி குறித்து ஈரான் பாதுகாப்பு தலைவர் மோஹ்சென் ரேசாய் கூறியதாவது:- "போர்க்களத்திலும் ஹார்மூஸ் ஜலசந்தியிலும் முக்கியமான தோல்வியை ஈரான், டிரம்புக்க்கு வழங்கியது. வாஷிங்டன்னில் அரசியல் தோல்வியையும் கொடுத்துள்ளது . ஈரானிடம் யாரேனும் சண்டைக்கு வந்தால், போர்க்களத்தில் மட்டுமின்றி அவர்கள் சொந்த நாட்டிலும் அதற்கான விலையை கொடுப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு இடையே, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஈரானுக்கு எதிரான போர் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கை மாறப்பொவது இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை