தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கொச்சியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துவது குறித்து... வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கொச்சியில் நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடவடிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர். தீபாவளி திருநாளையொட்டி நவ. 8 வரையில் போராட்டங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படாது என்றும் அறிவித்தனர். இதனிடையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்திய ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்துவதற்கான இடங்களில் இருந்து தில்லி காவல்துறை நீக்கியது. இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் ஞானேஷ் குமார், எஸ்ஐஆருக்கு எதிராக நாளை (நவ. 7) போராட்டம் நடத்தப்படுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே கலந்து கொள்கிறார். தீபாவளி திருநாள் வரையில் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று கூறிய நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்ஐஆர்! கொச்சியில் நாளை சிஜேபி மீண்டும் போராட்டம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗