சிலருக்கு மட்டும் ஏன் நான்கு மணிநேர தூக்கமே போதுமானதாக இருக்கிறது?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
சிலருக்கு மட்டும் ஏன் நான்கு மணிநேர தூக்கமே போதுமானதாக இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images சிலருக்கு மிகக் குறைந்த நேரம் தூங்கினாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், நீங்கள் அத்தகைய நபர்களில் ஒருவரா என்பதைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அதிக நேரம் தூங்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை என்கிறார் ஏமி பியூ பெர்னார்ட். தற்போது அவர் இரவு 10 மணியளவில் உறங்கச் சென்று அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிடுகிறார். "நான் உறக்கத்தில் இருந்து முழுமையாக விழித்துவிடுகிறேன். என்னால் தொடர்ந்து படுக்கையில் இருக்க முடியாது" என்கிறார் அவர். கொலராடோ பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்புவியல் பேராசிரியராக பெர்னார்ட் இருக்கிறார். அவருக்கு சில நேரங்களில் உடனடியாகத் தூக்கம் வராது. அப்படிப்பட்ட நாட்களில் அவர் வெறும் ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்கியிருப்பார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அடுத்த நாளும் அவர் வழக்கம் போல உற்சாகமாக இருக்கிறார். தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்கிறார், ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். காலை 8 மணிக்கு முன்பே ஒன்றரை மணி நேரம் வேலை செய்துவிடுகிறார். குறைந்த நேரம் தூங்கிவிட்டு இவ்வளவு வேலைகளைச் செய்யும் அவரது திறனைப் பார்த்து நண்பர்கள் வியப்படைகிறார்கள். ஆனால், அவரது குடும்பத்தில் இது இயல்பான ஒன்றுதான். அவரது தந்தையும் சகோதரரும்கூட அப்படித்தான். பட மூலாதாரம், María Medem/ BBC ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு இதைவிட அதிக நேரத் தூக்கம் தேவைப்படுகிறது. அமெரிக்க தேசிய தூக்க அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வுப்படி, 26 முதல் 64 வயதுக்குட்பட்ட சராசரி வயது வந்தோருக்கு ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் ஏழு முதல் ஒன்பது மணிநேரத் தூக்கம் தேவைப்படுகிறது. மக்களுக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவில் ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது என்பது நீண்ட காலமாக ஒரு புதிராக இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மரபணுக்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். End of அதிகம் படிக்கப்பட்டது பெர்னார்ட் போன்றவர்களிடம் காணப்படும் அரிதான மரபணு மாற்றங்கள் முதல், பொதுவாகப் பலரிடம் காணப்படும் நூற்றுக்கணக்கான மரபணு வேறுபாடுகள் வரை, சிலர் ஏன் மிகக் குறைந்த நேரம் தூங்கினாலும் இயல்பாகச் செயல்பட முடிகிறது என்பதை இவை விளக்குகின்றன. எதிர்காலத்தில், போதுமான தூக்கம் கிடைக்காதவர்களை அதன் வழக்கமான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவக்கூடும். கடந்த 2019ஆம் ஆண்டில், பெர்னார்ட் தனது அபாரமான தூக்கத் திறனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை அறிந்துகொண்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் பிரான்சிஸ்கோ ஆராய்ச்சிக் குழு, மனிதர்களின் தூக்க நேரத்துடன் தொடர்புடைய ஒரு மரபணு மாற்றத்தைக் கண்டறிந்திருந்தது. இந்த மாற்றத்தைக் கொண்டிருந்தவர்கள் வழக்கமான நேரங்களில் உறங்கச் சென்றாலும், அவர்கள் மிக அதிகாலையில் எழுந்தனர், இரவில் நான்கு முதல் ஆறரை மணிநேரம் வரை மட்டுமே அவர்கள் தூங்கினர். தனது ரத்த மாதிரியை அந்த ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய பெர்னார்ட், தானும் இந்த மரபணு மாற்றத்தைக் கொண்டிருப்பதை அறிந்துகொண்டார். இந்த அரிதான, மரபுவழியாகப் பெற்றுக் கொள்ளப்படும் உடல்நிலைக்கு குடும்ப வழி இயற்கையான குறைந்த தூக்கத் தேவை (Familial Natural Short Sleep – FNSS) என்று பெயர். அதற்குப் பிறகு, எஃப்என்எஸ்எஸ் பாதிப்புடன் தொடர்புடைய மேலும் பல மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்த நிலையைக் கொண்டவர்கள் குறைந்த நேரம் தூங்கினாலும் எவ்வாறு இயல்பாகச் செயல்படுகிறார்கள் என்பது மிகப் பெரிய புதிர்களில் ஒன்று என்கிறார் அந்த ஆய்வுக் குழுவின் தலைவரும் மூலக்கூறு உயிரியல் நிபுணருமான யிங்-ஹுய் ஃபூ. எஃப்என்எஸ்எஸ் உடன் தொடர்புடைய மரபணு வேறுபாடுகள் தூக்க நேரத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, குறைவான தூக்கத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்கக்கூடும் என்பதற்கான சுவாரஸ்யமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நினைவாற்றல் பாதிப்பு இதற்கு ஓர் உதாரணம். கடந்த 2019ஆம் ஆண்டு ஃபூ தலைமையிலான ஓர் ஆய்வில், எஃப்என்எஸ்எஸ் உடன் தொடர்புடைய மரபணு மாற்றம் எலிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மரபணு மாற்றத்தைக் கொண்ட எலிகள் குறைவான நேரம் தூங்கினாலும், நினைவாற்றல் குறைபாடுகளில் இருந்து அவை பாதுகாக்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. மற்றோர் ஆய்வில், இந்த மரபணு மாற்றங்களில் சிலவற்றைக் கொண்ட எலிகளுக்கு அல்சைமர் நோயின் அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. சர்வதேச ஆய்வுக் குழு ஒன்று 2014ஆம் ஆண்டில், ஒரே கருமுட்டையில் இருந்து உருவாகாத இரட்டையர்களை ஆய்வு செய்தது. அவர்களில் ஒருவருக்குக் குறைந்த நேரத் தூக்கத்துடன் தொடர்புடைய மரபணு மாற்றம் இருந்தது, மற்றொருவருக்கு அந்த மாற்றம் இல்லை. மரபணு மாற்றம் கொண்ட இரட்டையர், தனது சகோதரரைவிட தினமும் சுமார் ஒரு மணிநேரம் குறைவாகத் தூங்குவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இருவரும் தொடர்ந்து 38 மணிநேரம் தூங்காமல் இருக்கச் செய்யப்பட்டபோது, மற்றவருடன் ஒப்பிடுகையில் மரபணு மாற்றம் கொண்ட இரட்டையரிடம் செயல்திறன் குறைபாடுகள் (Performance lapses) சுமார் 40% குறைவாக இருந்ததையும் கண்டறிந்தனர். இருவரின் தூக்க முறைகளிலும் சில சுவாரஸ்யமான வேறுபாடுகள் இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். குறைந்த நேரமே தூங்கினாலும், மரபணு மாற்றம் கொண்ட இரட்டையர் தனது சகோதரரைப் போலவே கிட்டத்தட்ட அதே அளவு விரைவான கண் அசைவில்லாத தூக்கத்தைப் பெற்றிருந்தார். இதில் ஆழ்ந்த தூக்கமும் அடங்கும். இதன் மூலம், அவர் தூங்கிய குறைந்த நேரத்திலேயே, சில வகைகளில், அதிகமான தூக்கப் பலன்களைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவை மிகவும் அவசியமானவை என்கிறார் ஃபூ. கடந்த சில ஆண்டுகளாக, இந்த மரபணு வேறுபாடுகள் குறித்த புரிதலை மனிதர்களுக்குப் பயனுள்ளதாக மாற்றுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், குறைந்த நேரம் தூங்குபவர்களிடம் காணப்படும் இந்த மரபணு மாற்றங்களைக் கொண்டு எதிர்காலத்தில் தூக்கக் கோளாறுகளுக்கான மருந்துகளை உருவாக்கலாம் என நம்புகின்றன. ராணுவ வீரர்கள் குறைந்த நேரம் தூங்கியும் இயல்பாகச் செயல்படுவதற்கான வழிகளைக் கண்டறியவும் இது உதவக்கூடும். ஆனால், இதற்கு முதலில் சில முக்கியமான கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் விடை காண வேண்டும். இந்த மரபணு மாற்றங்கள் குறைவான தூக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உண்மையிலேயே பாதுகாக்கின்றனவா? அப்படியானால், அவை எவ்வாறு செயல்படுகின்றன? இதற்கான தெளிவான புரிதலின்றி மருந்துகளை உருவாக்கினால், எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்படலாம். "அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் குறைவாகத் தூங்கிவிட்டு, பத்து அல்லது ஐந்து ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு அல்சைமர், பார்கின்சன் அல்லது புற்றுநோய் போன்ற நோய்களைப் பெற விரும்ப மாட்டீர்கள்" என்கிறார் ஃபூ. எஃப்என்எஸ்எஸ் உடன் தொடர்புடைய மரபணு மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணங்களாக இருந்தாலும், ஒருவரின் தூக்க நேரத்தைத் தீர்மானிப்பதில் அவை மட்டுமே பங்கு வகிப்பதில்லை. ஒருவர் எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பதில் 30% முதல் 65% வரை மரபணுக்களின் தாக்கம் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, மனிதர்களிடையே காணப்படும் தூக்க நேர வேறுபாட்டில் அதிகபட்சமாக 65 சதவிகிதத்தை மரபணுக்களால் விளக்க முடியும். இதுவரை, தூக்க நேரத்தைப் பாதிக்கக்கூடிய மரபணுக்களில் நூற்றுக்கணக்கான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 6.5 லட்சம் பெரியவர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், இதுபோன்ற 244 மரபணுப் பகுதிகள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வுக் கட்டுரைகள் இன்னும் வெளியாகவில்லை; அச்சுக்கு முந்தைய நிலையில் உள்ளன. இந்தப் பொதுவான மரபணு மாற்றங்களில் ஏதேனும் ஒன்றைத் தனியாக எடுத்துக் கொண்டால், அது தூக்க நேரத்தில் ஒரு நிமிட வித்தியாசத்தையே ஏற்படுத்தும் என்கிறார் அந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் லண்டன் கிங்ஸ் கல்லூரி மரபணு ஆய்வாளருமான இசபெல் ஆஸ்டின்-ஸிம்மர்மேன். ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாகக் கணக்கிட்டால், அதன் தாக்கம் அதிகரிக்கக்கூடும். சராசரியாக, மரபணு வேறுபாடுகள் காரணமாக மனிதர்களின் தூக்க நேரத்தில் சுமார் 20 நிமிட வித்தியாசம் ஏற்படலாம் என்கிறார் அவர். ஆனால், இந்தப் பொதுவான மரபணு வேறுபாடுகளில் எவை குறைவான தூக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ஒருவரைப் பாதுகாக்கின்றன என்பது குறித்து இதுவரை அதிக ஆய்வுகள் நடைபெறவில்லை. பட மூலாதாரம், Getty Images இருப்பினும், லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளரும் மகப்பேறு மருத்துவ நிபுணருமான சியாரா பெட்ரோசெல்லினி தலைமையில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இதற்கான ஓர் ஆதாரம் கிடைத்துள்ளது. இருமுனைக் கோளாறு (Bipolar Disorder) கொண்ட 343 பெண்களின் மரபணுக்களை ஆராய்ச்சிக் குழு ஆய்வு செய்தது. இவர்கள் அனைவரும் குழந்தை பெற்றவர்கள். இதில் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படும் மரபணு மாற்றங்கள் இருப்பதன் அடிப்படையில், ஒருவர் குறைந்த நேரம் தூங்குபவராக இருப்பதற்கான சாத்தியக்கூறு மதிப்பிடப்பட்டது. இதில், குறைவான தூக்கத்துக்கான மரபணு வாய்ப்பு அதிகமாக இருந்த பெண்களுக்கு, அந்த வாய்ப்பு குறைவாக இருந்த பெண்களுடன் ஒப்பிடும்போது, பிரசவத்திற்குப் பிந்தைய மனநோய் (Postpartum Psychosis) ஏற்படுவதற்கான ஆபத்து பாதியாக இருந்தது. தூக்கமின்மை (Insomnia) தொடர்பாகவும் இதேபோன்ற போக்கு காணப்பட்டது. இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆனால், இத்தகைய பெண்கள் தங்கள் வாழ்நாளின் தொடக்கத்தில் இருந்தே தூக்கக் குறைபாட்டைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், குறைவான நேரம் தூங்குவதற்கான மரபணு ரீதியான நாட்டம் எப்போதும் நன்மை அளிப்பதில்லை. ஆஸ்டின்-ஸிம்மர்மேன் மற்றும் அவரது குழுவினர் மிகப் பெரிய மக்கள் தொகையிடம் நடத்திய ஆய்வில், குறைவான தூக்கத்துடன் தொடர்புடைய மரபணு வேறுபாடுகள் பொதுவாகத் தூக்கமின்மை மற்றும் சோர்வு ஏற்படுவதற்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையவை என்பது தெரிய வந்தது. மேலும், கவனக் குறைவு மற்றும் மிகைச் செயல்பாட்டுக் கோளாறு (ADHD), மனச்சோர்வு அறிகுறிகள், இரண்டாம் வகை நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உளவியல் மற்றும் உடல்நலப் பிரச்னைகளுடனும் இவை தொடர்புடையவையாக இருந்தன. இதனால் குறைவான தூக்கம் அல்லது அதற்கான மரபணு ரீதியான நாட்டம் நேரடியாக இந்த நோய்களை ஏற்படுத்துவதாக அர்த்தமில்லை. ஆனால், குறைவாகத் தூங்குவதற்கான மரபணு ரீதியான நாட்டம் கொண்ட அனைவரும் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுவதில்லை என்பதை இது உணர்த்துகிறது. பட மூலாதாரம், Getty Images இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்குவது என்னவென்றால், குறைவாகத் தூங்கினாலும் தங்களால் இயல்பாகச் செயல்பட முடிவதாகக் கருதுவோர்கூட எப்போதும் சிறந்த முடிவெடுப்பவர்களாக இருப்பதில்லை. ஓர் ஆய்வில், ஆரோக்கியமான பெரியவர்கள் இரவில் வெறும் நான்கு அல்லது ஆறு மணிநேரம் மட்டுமே படுக்கையில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு அறிவாற்றல் திறன் சோதனைகளில், அவர்களின் செயல்திறன் தொடர்ந்து குறைந்துகொண்டே இருந்தது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் தங்களுக்கு "சற்று" மட்டுமே தூக்கம் வருவதாக மதிப்பிட்டனர். "நீங்கள் படிப்படியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகிறீர்கள், ஆனால் அதே நேரத்தில் அந்தப் பாதிப்பைப் பற்றி நீங்கள் மேன்மேலும் அறியாமலும் போகிறீர்கள்," என்கிறார் வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் தூக்கம் மற்றும் செயல்திறன் ஆராய்ச்சி மையத்தின் தூக்க விஞ்ஞானியும், இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியருமான ஹான்ஸ் வான் டோங்கன். மற்றவர்களைவிட பலருக்குக் குறைவான தூக்கமே தேவைப்படுகிறது என்பது இன்னும் உண்மையாகத்தான் இருக்கிறது. வான் டோங்கன் செய்த பிற ஆராய்ச்சிகளில், சிலர் தூக்கமின்மையை அதிகத் திறனுடன் தாங்கிக் கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒருவர் எத்தனை மணிநேரம் தூங்குகிறார் அல்லது அடுத்த நாள் எப்படி உணர்கிறார் என்று கேட்பதைவிட, இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது மிகவும் சிக்கலானது என்பதே இதன் பொருள். நீண்ட கால அடிப்படையில், ஆஸ்டின்-ஜிம்மர்மேன், ஃபூ போன்றோரின் மரபணு கண்டுபிடிப்புகள், குறைந்த தூக்கத்தில் உண்மையில் யார் நலமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவக்கூடும். நன்றாக உணர்ந்தாலும், பாதிப்புக்குள்ளாகும் அதிக அபாயத்தில் உள்ளவர்களைப் பிரித்தறியவும் இது உதவக்கூடும். இறுதியில், குறைந்த நேரம் தூங்கும் நபர்கள், அதை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்த உதவும் மருந்துகளை உருவாக்க இவை வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதற்கிடையில், மக்கள் தாங்கள் ஏன் அவ்வாறு தூங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்புகள் உதவும். தனக்கு எஃப்.என்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய மரபணு மாற்றம் இருப்பதை அறிந்துகொண்டது மன அழுத்தத்தைக் குறைத்ததாகக் கூறுகிறார் பெர்னார்ட். ஒரு விஞ்ஞானியாக, தூக்கம் உள்பட மனிதர்களிடம் இயற்கையாகவே பல்வேறு வேறுபாடுகள் இருப்பதை அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார். குறிப்பாக, கணவரும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலையில் எழுந்து தனது வேலைகளைத் தொடங்குவதற்கு இந்தக் கூடுதல் நேரம் உதவியதாகவும் அவர் கூறுகிறார். இருப்பினும், தன்னால் அதிக நேரம் தூங்க முடியாததற்குக் காரணம் ஓய்வெடுக்கத் தெரியாததா அல்லது ஒரே நேரத்தில் அதிகப் பொறுப்புகளைச் சுமப்பதா என்று அவர் முன்பு யோசித்திருக்கிறார். "இப்போது எனக்கு அதற்கான பதில் கிடைத்துவிட்டது. மரபணு ரீதியாகவே நான் இப்படித்தான் இருக்கிறேன் என்பது தெரிந்துவிட்டது. இனி இதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்" என்கிறார் பெர்னார்ட். அமண்டா ருகேரி ஒரு அறிவியல், உளவியல் மற்றும் வரலாற்றுப் பத்திரிகையாளர். அவரது தி ஸ்லீப் மித் (The Sleep Myth) என்ற புத்தகம் 2027 கோடையில் வெளியாகவுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை