இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி... தங்கம், வெள்ளி விலை... - ENS கடந்த நான்கு நாளாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று (நவ. 6) காலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், வர்த்தகத்தின் இடையே குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் கடந்த 4 நாள்களும் உயர்ந்தது. இன்று காலை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், வர்த்தகம் தொடங்கிய பிறகு சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 6, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 1,960 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 245 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,140 -க்கு விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 205 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.05 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலை? (நவ. 6)
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗