இணையவழி பயங்கரவாதத்துக்கு என்னதான் தீர்வு?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இணையவழி பயங்கரவாதத்துக்கு என்னதான் தீர்வு?

இணையவழி பயங்கரவாதத்துக்கு என்னதான் தீர்வு? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... நிறுவனங்களின் பொறுப்பு இணையவழியில் பயங்கரவாதத்தை அரங்கேற்றத் திட்டமிடும் தேச விரோத சக்திகளைக் கண்டறிவது மிகவும் எளிது. நமக்கு இணைய வசதியை வழங்கும் நிறுவனங்கள் தங்களது கண்காணிப்பு வளையத்தைப் பலப்படுத்தினால்போதும். ஆட்சேபகரமான செய்திகளைப் பதிவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷமிகளின் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். அவர்கள் குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இணையத்தில் பரப்பப்படும் செய்திகளை செயற்கை நுண்ணறிவு கொண்டு பரிசோதித்தல் வேண்டும். சந்தேகம் ஏற்படும் நிலையில் அந்த இணைப்பை செயலிழக்க செய்வது நல்ல தீர்வைத் தரும். வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர். இணையவழித் தீர்வு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளில் வரும் சந்தேகத்துக்குரிய மின்னணு இணைப்புகளைச் சொடுக்குவதோ, தேவையற்ற கோப்புகளை பதிவிறக்கம் செய்வதோ கூடாது. ரயில் நிலையங்கள் அல்லது உணவங்களில் கிடைக்கும் பொது கம்பியில்லா இணைப்புகளை (வைஃபை நெட் ஒர்க்) பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த செயல்பாடுகள்மூலம் இணையவழி பயங்கரவாதத்தை அறவே ஒழிக்கலாம். இதற்கு இணையவழியிலேயே தீர்வு உண்டு என்பதை அனைவரும் அறிய வேண்டும். ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம். விழிப்புணர்வும்...மனிதநேயமும்... சட்டங்கள் மட்டும் போதாது; சமூக விழிப்புணர்வும் அவசியம். சந்தேகத்துக்குரிய தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அரசு, காவல் துறை, இணைய நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தைத் தூண்டும் இணையக் கணக்குகளைக் கண்காணித்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இணைய பாதுகாப்புக் கல்வியும், பகுத்தறிவுச் சிந்தனையும் வளர்க்கப்பட வேண்டும். இணையவழிப் பயங்கரவாதத்தைவிட விழிப்புணர்வும், மனிதநேயமும் வலிமையானவை! அறிவார்ந்து செயல்படல்... இணையவழி சேவை எவ்வாறு நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளதோ, அந்த அளவுக்கு அதன் எதிர்மறை விளைவுகளும் நம்மை தாக்கத் தொடங்கியுள்ளன. அழிவை ஓரங்கட்டி, ஆக்கத்தை வரவேற்போம். அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் தொழில்நுட்பம் சார்ந்த விதிகளைப் பின்பற்றுவோம். அரசு ஒருபுறம் பயங்கரவாதத்தை முறியடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும், நாமும் நம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி இணையவழி பயங்கரவாதத்தின் பாதிப்பில் விழாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். ஜோ.வே. ஜீவா, திருப்பதிசாரம். வடிவமைப்பில் மேம்பாடு இணையவழி ஹேக்கர்களின் பாதையைக் கண்டறிந்து உடனடியாக நீக்கும் வகையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஓர் அமைப்பை வடிவமைக்க வேண்டும். சர்வதேச ஒத்துழைப்புடன் ஒருங்கே செயல்படுத்தும் தடை தகர்க்கும் முறைமையை வகைமைப்படுத்த வேண்டும். போலி இணைப்பு, போலி செயலி, போலி மின்னஞ்சல்களைக் கண்டறிய பயிற்சியளிக்க வேண்டும். கண்டறிந்தால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க உடனடியாக இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ப. தாணப்பன், தச்சநல்லூர். ஒருபுறம் எண்ணற்ற நன்மைகளைத் தந்தாலும், மற்றொருபுறம் விதவிதமான இணையவழி குற்றங்கள், இணையவழி அச்சுறுத்தல், பயங்கரவாதம் போன்ற தீமைகளும் உள்ளன. மக்களிடையே போலிகளை அடையாளம் காணும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நல்ல விழுமியங்களைத் தொடர்ந்து போதித்தல், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சிறப்புப் பிரிவுகள் மூலம் கண்காணித்தல், மென்பொருள்களை அவ்வப்போது புதுப்பித்தல், இணையப் பாதுகாப்புக்கான சட்ட அமலாக்கம், சர்வதேச ஒத்துழைப்பு போன்றவை மூலம் பல அடுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். தே.ச. மங்கை, திருநெல்வேலி. இரு முனைகளும் கூரானது இணையம் என்பது இரு முனைகளும் கூர்மையாக இருக்கும் கத்திபோல. அதைப் பயன்படுத்துவோரின் மனநிலையைப் பொருத்துத்தான் அதன் விளைவுகள் தெரியும். எனவே, எல்லாவற்றுக்கும் இணையவழியைப் பயன்படுத்துதல் அவசியம்தானா என்ற கேள்வியும் எழுகிறது. இதனுடன் ஏ.ஐ. தொழில்நுட்பமும் சேரும்போது அதன் எதிர்மறைத் தாக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மாறிவரும் சூழலில் இணையவழிப் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கவோ, ஒதுக்கவோ முடியாத நிலையில், முடிந்தவரை உலக இணைய வல்லுநர்களைக் கொண்டு கட்டுப்படுத்துவது மட்டுமே இணையவழிப் பயங்கரவாதத்துக்கு தீர்வாக இருக்கும். மகிழ்நன், கடலூர். எச்சரிக்கையுடன்... முதலில் நம் அனைவருக்கும் தேவையானது எச்சரிக்கையே. இணையவழித் தாக்குதல், இணையவழி உளவு, இணையவழிக் குற்றம், இணையவழி பயங்கரவாதம் எனப் பல விதங்களில், பல வடிவுகளில் இணையவழிப் போர் அன்றாடம் பெருகி மனித குலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இணையவழித் தாக்குதல்களில் சிக்காமலிருக்க, மீளத் தகுந்த பாதுகாப்பு வளையங்களை உருவாக்குவது அரசின் கடமை. அதேபோல், இணையங்களின் செயல்பாடுகளை உற்று நோக்கி, உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுப்பதும், பயனாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பலன் தரும். கே.ராமநாதன், மதுரை. பயிற்சி அளித்தல் இணையவழி பயங்கரவாதத்தைத் தடுக்க சமூக விழிப்புணர்வு அவசியம். பொய்ச் செய்திகள், வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் தீவிரவாதச் சிந்தனைகளைப் பரப்பும் இணையதளங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு இணையப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான சமூக ஊடகப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இணையத்தைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் பண்பை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ப. மோகனவேல், காஞ்சிபுரம். சட்டத்தால் முடியாது சட்டப் பாதுகாப்பு என்பது ஓர் அரணாக இருந்தாலும் தனி மனித விழிப்புணர்வு என்பதே இனையவழி பயங்கரவாதத்துக்கு உண்மையான தீர்வு. இணையப் பயன்பாடு என்பது ஒவ்வொரு தனி மனிதராலும் சுய கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு செயல். இதில் செய்து கொள்ளப்படும் எந்த ஒரு சிறிய சமரசமும் எதிர்பாராத வகையில், நேரத்தில் வெடிக்கும் பயங்கர குண்டு வெடிப்புக்குச் சமம். நடந்து முடிந்த பிறகுதான் அதன் விளைவுகள் தெரியும். தனி மனிதனோ, சமூகமோ தங்களை விழிப்புணர்வுடன் பாதுகாத்துக்கொள்வதே தீர்வு. வெ.க. சந்திரசேகரன், வெள்ளக்கிணறு. வலிமையான கட்டமைப்பு பயங்கரவாதிகள் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதால், அனைத்து நாடுகளும் இணைந்து உடனடித் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், இணையக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களை வலுப்படுத்தவும் வேண்டும். அரசின் முக்கியத் துறைகள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், மின்சார வாரியங்கள், அணுமின் நிலையங்கள் மற்றும் தகவல் தொடர்புத் தளங்கள் மீது நடத்தப்படும் இணையத் தாக்குதல்களைத் தடுக்க வலுவான தரவுப் பாதுகாப்பு முறைகளை திறமையான வல்லுநர்கள் மூலம் கட்டமைக்க வேண்டும். ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி. தெரியாத நபர்களிடம் இருந்துவரும் செய்திகளைப் பரப்பக் கூடாது. அந்தச் செய்தி வதந்திதான் என்று புரிய வைக்க வேண்டும். தெரியாத நபர்களிடம் பணம் பெற்றுக் கொள்வதோ, அவர்களுக்குப் பணம் அனுப்புவதோ தவறு என்பதை உணர்த்த வேண்டும். சந்தேகத்துக்கிடமான கைப்பேசி அழைப்பு, செய்திகள் வந்தால் காவல் துறையிடம் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். சைபர் கிரைம் காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு பயங்கரவாதிகள் விரிக்கும் வலைகளை நீக்க வேண்டும். சீனி செந்தில்குமார், தேனி. அடிமையாகக் கூடாது ஸ்பெயின் தேசத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த ரயில் விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்துக்கு இணையவழி கோளாறுதான் காரணம் என்று அந்த நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்தச் செயலுக்கு இணையவழி பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. வீட்டு வாசலில் வந்து மருந்துகொடுத்துச் செல்லும் அளவுக்கு சேவையை இணையம் வழங்கினாலும், அதற்கு நாம் அடிமையாகக் கூடாது. ஏனெனில் இணையமோ, கணினியோ இன்றி மனிதன் உயிர்வாழ முடியும். ஆனால், இப்பூவுலகு மனிதன் இன்றி என்னவாகும்? என்பதைச் சிந்திக்க வேண்டும். ச.அ. அலெக்சாண்டர், வரதராஜன் பேட்டை. தண்டனைகளில் கடுமை இணையமானது உலகெங்கும் இருப்பவர்களை இணைப்பதற்குத்தானே தவிர, இன்னல்கள் கொடுப்பதற்கு அல்ல. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு, பள்ளிப் பாடத்தில் இது குறித்த அறிவுறுத்தல், பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை, அரசு கண்காணிப்பு என எத்தனை படிநிலைகளில் நாம் இணையவழி பயங்கரவாதத்தை எதிர்கொண்டாலும், அதன் தாக்கம் வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே, இணையக் குற்றத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் முறையில் இனி அரசு கவனம் செலுத்த வேண்டும். என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை