இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 185 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 185 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைப் பற்றி... விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர். - படம்: ஏபி. இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் இன்று (நவ. 4) காலை ஆக்லாந்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். அதன்படி, முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் - டிம் செய்ஃபெர்ட் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங், 9 ரன்களில் வில் யங்கின் விக்கெட்டை காலி செய்தார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸும் 9 ரன்களில் ஆட்டமிழக்க நிதனமாக விளையாடி 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டி20 போட்டி தொடரில் மூன்று அரைசதங்கள், ஒரு சதம் விளாசிய க்ளென் ப்லிப்ஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், கடைசி கட்டத்தில் ப்ளேர் டிக்னர் 1 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்து குர்னூர் ப்ராரின் பந்து வீச்சில் வீழ்ந்தார். இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்னூர் ப்ரார் 3 விக்கெட்டுகளும், காம்போஜ் 2 விக்கெட்டுகளும் என 9 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் வீழ்த்தினர். டேரில் மிட்செல் ரன்-அவுட்டானார். Invited to bat by India, New Zealand all out for 185 in first ODI at Auckland with pacer Arshdeep Singh claiming four wickets. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை