இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்

பட மூலாதாரம், Getty Images தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி இயங்கும் இந்து கோயில்களுக்குள் பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களையும், அந்தக் கோயிலின் தெய்வத்தின் மீது தங்களுக்கு மரியாதை இருப்பதை உறுதிப்படுத்தாதவர்களையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இந்து அல்லாத ஒருவர் கோயிலுக்குள் செல்ல விரும்பினால், அந்தக் கோயிலில் உள்ள குறிப்பிட்ட தெய்வத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், கோயிலின் மரபுகள் மற்றும் வழக்கங்களைப் பின்பற்றுவதாகவும் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவது பற்றி தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் என்ன சொல்கிறது? கோயிலுக்குள் நுழைய விரும்பும் பிற மதத்தினர் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், hcmadras.tn.gov.in இந்து மதத்தைச் சாராதவர்கள் கோயில் கருவறை மற்றும் மண்டபங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான சட்டப் பிரிவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி மதுரையைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், கோயிலின் முக்கிய இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களுக்குள் இந்து அல்லாதவர்கள் செல்வதற்கு ஏற்கெனவே நீதிமன்றம் தெளிவான தீர்ப்புகளை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்து அல்லாத ஒருவர் கோயிலுக்குள் செல்ல விரும்பினால், அந்தக் கோயிலில் உள்ள குறிப்பிட்ட தெய்வத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், கோயிலின் மரபுகள் மற்றும் வழக்கங்களைப் பின்பற்றுவதாகவும் உறுதிமொழிப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். End of அதிகம் படிக்கப்பட்டது இந்து அல்லாத பிற மதத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "தங்கள் மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களும், அந்த கடவுள் மீது தங்களுக்கு மரியாதை உண்டு என்பதை உறுதிப்படுத்தாதவர்களும், கோயில் வளாகத்திற்குள் நுழைவதற்கே அனுமதிக்கப்படக் கூடாது. இந்த உறுதிமொழி, அந்தந்தக் கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள படிவத்தின்படி இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர். 1972ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் 1947ஆம் ஆண்டு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டத்தில் உள்ள சட்டப்பூர்வ வரையறையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பழனி மலைக்கோயிலுக்குள் இந்து அல்லாத சில நபர்கள் சென்றதையடுத்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் கடந்த 2024-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. கோயில் என்பது சுற்றுலாத் தலமோ அல்லது பொழுதுபோக்கு இடமோ அல்ல என்றும், இந்து அல்லாத ஒருவருக்கு நம்பிக்கை இல்லையெனில், அவர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட முடியாது என்றும், அவ்வாறு அனுமதி மறுக்கப்படும்போது அவர்களின் உணர்வுகள் புண்படுவதாகக் கருத இடமில்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து அல்லாத பிற மதத்தினர் இந்துக் கோயிலுக்குள் நுழைய சில கட்டுப்பாடுகளையும் விதித்து அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, 1972ஆம் ஆண்டு கல்யாண்தாஸ் vs தமிழ்நாடு அரசு வழக்கில் 'கோயில் நுழைவு அங்கீகார விதிகளில்' 4ஏ என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இந்து அல்லாதவர்களையும் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டது முதன்மைச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி, அந்த விதியை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேற்கண்ட இரு நீதிமன்ற தீர்ப்புகளையும் ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. பட மூலாதாரம், TN DIPR கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்டதை நல்ல உதாரணம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அவரை இந்து மதத்துக்கு மாற வேண்டும் என்று யாரும் கோரவில்லை என்றும், அந்தக் கோயிலின் இறைவன் மீது தனக்கு மரியாதை இருப்பதை உறுதிப்படுத்த மட்டுமே கேட்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. பட மூலாதாரம், Getty Images தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம், 1947 குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் செந்தமிழ் அரசு, இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதே அச்சட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறினார். இந்தச் சட்டத்தின்படி, கோயில்கள் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அவை இந்துக்களுக்கோ அல்லது இந்து மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கோ உரிய பொது வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படுகின்றன என்று கூறிய அவர், முன்னர் சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கோயில் நுழைவு மறுக்கப்பட்ட நிலையில், அந்தப் பாகுபாட்டை நீக்கி, இந்து மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை வழங்குவதற்கான சட்டமாக அது அமைந்தது," என்றார். கோயிலின் குறிப்பிட்ட மரபுகள், ஆகம விதிகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான கட்டுப்பாடுகளும் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு தற்போது தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி செயல்படும் கோயிலுக்குள் இந்து அல்லாத பிற மதத்தினர் நுழைய, அதற்கென உள்ள உறுதிமொழிப் பத்திரப் படிவத்தை கோயிலில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்கள் அல்லது கோயில் நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் இருப்பதாகவும்" வழக்கறிஞர் செந்தமிழ் அரசு தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images இந்து சமய அறநிலையத்துறை தகவல்களின்படி, தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி இயங்கும் 7,461 கோயில்கள் உள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வழிபட விரும்பும் இந்து அல்லாத ஒருவர், முதலில் அந்தக் கோயிலின் நிர்வாகத்தை அணுகி உறுதிமொழிப் படிவத்தைப் பெற வேண்டும். இந்து சமைய அறநிலையத்துறை அளித்த தகவலின்படி பட மூலாதாரம், Getty Images நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவின்படி, தங்களது பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களும், அந்தக் கோயிலின் தெய்வத்தின் மீது மரியாதை இருப்பதை உறுதிப்படுத்தாதவர்களும் கோயில் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது. உறுதிமொழி அளிக்காத இந்து அல்லாதவர்கள், கோயிலின் கொடிமரத்தைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இத்தகைய நுழைவுகளை அனுமதிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் செயல்படக் கூடாது என்றும், ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களின் அறங்காவலர்கள் அந்த விதிகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயிலின் மத நடைமுறைகள் மற்றும் மரபுகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவை மீறும் தனிநபருக்கு எந்தக் குறிப்பிட்ட தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்த விவரம் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், உறுதிமொழியின்றி ஒருவர் நுழைந்தால் தானாகவே குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்தும் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. இந்தத் தீர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், "சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தற்போதைய வழக்கில் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளன. 1947ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம், அனைத்து இந்துக்களும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது. அதற்கு முன்பு சாதி அடிப்படையில் கோயில் நுழைவுக்குத் தடைகள் இருந்தன. அந்தத் தடைகளை எதிர்த்து பெரியார் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தவாதிகள் குரல் கொடுத்தனர். இந்த வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல், பழைய தீர்ப்புகளில் இடம்பெற்ற கருத்துகளை இன்றைய சூழலிலும் பொருத்திப் பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது," என்றார். 1972ஆம் ஆண்டு நீதிபதி ராமபிரசாத் ராவ் வழங்கிய தீர்ப்பிலும், 2024ஆம் ஆண்டு நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பிலும் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவது தொடர்பாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், "தற்போதைய தீர்ப்பிலும் அந்த முந்தைய தீர்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நீதிபதி ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் தனது முடிவை எடுப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்." என்றார். "ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கோயிலுக்குள் நுழையும்போது அங்குள்ள வழிபாட்டு நடைமுறைகளுக்கும், மத உணர்வுகளுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும். வழிபாட்டுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதை யாரும் ஏற்க முடியாது. அதேநேரத்தில், ஒருவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிப்பது குறித்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றும் ஹரிபரந்தாமன் தெரிவித்தார். "வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தேவாலயங்களுக்கும், சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களான குருத்வாராக்களுக்கும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் சென்று பார்வையிடுகின்றனர். அங்கு பின்பற்ற வேண்டிய வழிபாட்டு ஒழுங்குகளும், மரியாதை சார்ந்த நடைமுறைகளும் மட்டுமே வலியுறுத்தப்படுகின்றன. அதேபோன்ற அணுகுமுறை இங்கும் சாத்தியமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும்." என்றார் அவர். எனவே, "இந்த வழக்கில் நீதிமன்றம் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் மற்றும் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் முடிவெடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவது தொடர்பான தற்போதைய சட்ட நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது." என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்தார். இந்த தீர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், "நீதிமன்றத்தில் உள்ள விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. இந்தியா மதச்சார்பற்ற நாடு. இந்துக்களும் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். அப்துல் கலாமை ராமேஸ்வரம் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்திருப்பீர்களா?" என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை