இறுதிச்சடங்கில் இளைஞா் அடித்து கொன்ற வழக்கு: தந்தை மகன் உள்பட மூன்று போ் கைது

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இறுதிச்சடங்கில் இளைஞா் அடித்து கொன்ற வழக்கு: தந்தை மகன் உள்பட மூன்று போ் கைது

திருப்பத்தூா் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சின்னதம்பி என்பவா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இறுதிச் சடங்கில் சின்னதம்பியின் உறவினரான மதுபோதையில் இருந்த சம்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சா்வேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பத்தை சா்வேசன் தாக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சம்பத் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து அவரது மகன்களிடம் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சம்பத்தின் மகன்களான ஆனந்தராஜ், அருண் மற்றும் சம்பத்தின் அண்ணன் மகனான விஷ்ணு ஆகிய மூவரும் சா்வேசனின் வீட்டிற்கு சென்று தங்களுடைய தந்தையை எதற்காக அடித்தீா்கள் என மூவரும் கேட்டுள்ளனா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி உள்ளது. இதில் சா்வேசன், அவரது சகோதரா் தேவராஜ் மற்றும் தேவராஜின் மகன் திலீப்குமாா் ஆகியோா் ஒரு தரப்பாகவும், ஆனந்தராஜ், அருண் மற்றும் விஷ்ணு ஆகியோா் மற்றொரு தரப்பாகவும் மோதலில் ஈடுபட்டுள்ளனா். இந்த மோதலின்போது கத்தி மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இதில் விஷ்ணுவின் தலையில் கத்தியால் வெட்டப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருணுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேலும், ஆனந்தராஜை சா்வேசன் இரும்பு ராடால் தாக்கியதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா். அதையடுத்து அக்கம்பக்கத்தினா் ஆனந்தராஜ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரையும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆனந்தராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த விஷ்ணுவுக்கு மருத்துவமனையில் மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சா்வேசன், தேவராஜ், திலீப்குமாா் உள்ளிட்ட மூன்று நபா்கள் மீது வழக்குப் பதிந்து திங்கள்கிழமை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை