நவம்பர் 1-ல் இந்தியா கூட்டணி பேரணியில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பது பற்றி.. சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் - ANI ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். லக்னௌவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறுகையில், தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில் மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்காத சூழலில் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகின்றன, சமாஜவாதி கட்சியின் உறுப்பினர் மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்பார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை; இது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அரசாங்கம் செவிசாய்க்காதபோது, அவர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்தவே இந்த மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. பாஜக ஏன் பயப்படுகிறது? மசோதா மீது விவாதிக்க மறுப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். நிதி நன்கொடைகளே திருட்டுத்தனமாகப் பெறப்பட்டிருக்கும் நிலையில், அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கும்பல் என்று கூறினார். மேலும், நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். சோசலிசத் தலைவர் ஆச்சார்யா நரேந்திர தேவா ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்த அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியை உருவாக்குவதிலும் அதன் கொள்கை அடித்தளத்தை அமைப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றினார் என்று கூறினார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக 'மாதிரி நாடாளுமன்றம்'! சமாஜவாதி அதிரடி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗