பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.30,106 கோடியை ஈட்டியுள்ளன. நாட்டின் முன்னணி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகியவை, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.30,106 கோடியை ஈட்டியுள்ளன. எரிபொருள் விற்பனையில் நஷ்டம் மற்றும் நிலுவையில் உள்ள சமையல் எரிவாயு (எல்பிஜி) மானியச் சுமை அதிகரித்த போதிலும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வருவாய் மற்றும் கையிருப்பு ஆதாயங்கள் மூலம் இந்நிறுவனங்கள் மிகச் சிறந்த லாபத்தைப் பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த 3 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 68.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், முந்தைய ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்த நிறுவனங்கள் சந்தித்த சுமாா் ரூ.18,150 கோடி இழப்பில் இருந்து மீண்டு பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளன. ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ஈட்டப்பட்ட இந்த லாபமானது, கடந்த முழு நிதியாண்டின் மொத்த லாபமான ரூ.77,281 கோடியில் சுமாா் 39 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக் காலாண்டு லாபத்தில் அதிகபட்சமாக, ஐஓசி இதுவரை இல்லாத அளவாக ரூ.21,630 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட லாபமான ரூ.7,610 கோடியைவிட மும்மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில், பிபிசிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் 22.5 சதவீதம் சரிந்து, ரூ.4,993 கோடியாகவும்; எச்பிசிஎல் நிறுவனத்தின் லாபம் 9 சதவீதம் குறைந்து, ரூ.3,483 கோடியாகவும் பதிவாகியுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த மே மாதத்தில் இருந்தும், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாா்ச் மாதத்தில் இருந்தும் மாற்றமின்றி நீடிக்கின்றன. கடந்த மாதம் வரை பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.4 முதல் 5 வரையிலும், டீசலில் லிட்டருக்கு ரூ.18 முதல் 20 வரையிலும் நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வந்தன. பெட்ரோல், டீசல் விலைகள் சந்தை நிலவரப்படி மாற்றப்படக்கூடியவை என்றாலும், தற்போதைய சூழலில் இந்த இழப்பை நிறுவனங்களே ஏற்றுக்கொண்டு வருகின்றன. மறுபுறம், எல்பிஜி விலை தொடா்ந்து அரசின் கட்டுப்பாட்டுப் பொருளாகவே உள்ளது. இதற்கு அரசு வழங்கும் மானியம் உரிய நேரத்தில் வந்து சேராததால், செப்டம்பா் மாத இறுதி நிலவரப்படி 3 நிறுவனங்களுக்கும் சோ்த்து மொத்த இழப்புத் தொகை ரூ.67,900 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ஐஓசிக்கு மட்டும் ரூ.32,505.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டா் மீதான நஷ்டம் செப்டம்பரில் ரூ.184 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் இது ரூ.370 வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் சுத்திகரிப்பு லாபவரம்பு உயா்ந்ததே இந்த வலுவான நிதி நிலைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. எனினும், மேற்காசிய சூழல் சீரடைந்து கச்சா எண்ணெய் விலை குறையும் நிலையில், கையிருப்பு இழப்பு காரணமாக வரும் காலாண்டுகளில் லாப வரம்பில் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐஓசி எச்சரித்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூலை - செப். காலாண்டில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ரூ.30,106 கோடி: சுத்திகரிப்பு வருவாய் கைகொடுத்ததால் சாதனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗