மின்சார கொள்முதல் குறித்து திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து... திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்) கேரளத்துக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என்றால், தவெக அரசுக்கு சாத்தியமில்லாமல் போனது ஏன்? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35, ரூ. 37, ரூ. 41.50 கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை ரூ. 14.50, ரூ. 12.50-க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது. அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 8.645-க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், ரூ. 8.645 / ரூ. 12.50/ ரூ. 14.50-களில் கேரளரத்துக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளத்துக்கு குறைந்த விலை மின்சாரம்: தவெக அரசுக்கு சாத்தியமில்லாதது ஏன்? - மு.க. ஸ்டாலின் கேள்வி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗