தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவ. 9-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து... கோயம்பேடு சந்தை - கோப்புப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திங்கள்கிழமை (நவ. 9) ஒரு நாள் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, அதற்கடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.9) தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், சந்தை வியாபாரிகள், தொழிலாளா்கள் மற்றும் சுமை தூக்கும் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வழிவகை செய்யும் நோக்கில் வரும் திங்கள்கிழமை(நவ. 9) கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், திங்கள்கிழமை (நவ. 9) சந்தை இயங்காது என்பதால், சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை முன்கூட்டியே வாங்கித் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். செவ்வாய்க்கிழமை (நவ.10) முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவ. 9-ம் தேதி விடுமுறை
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗