கனடாவிலிருந்து இந்தாண்டு செப்டம்பர் 30 வரை வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,526 என தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவிலிருந்து இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,526 என தரவுகள் தெரிவிக்கின்றன. இது அந்நாட்டின் மொத்த வெளியேற்ற நடவடிக்கைகளில் 27%-க்கும் அதிகமாகும். அதேபோல, ஒரே ஆண்டில் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களில் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான தரவுகள் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் கீழ் வெளியாகியுள்ளது. கனடாவில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின் இனவாரியான வெளியேற்றப் பட்டியலில் இந்தியர்களே மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 2020-ல் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 12,858. அதில், 1,424 பேர் இந்தியர்கள். இது மொத்த வெளியேற்றத்தில் 11%. இடைப்பட்ட ஆண்டுகளில் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்கள் அதிகளவு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். கனடாவிற்குள் நுழையத் தகுதியற்றவர்களாக கடந்த ஆண்டு 3,779 இந்தியர்கள் கருதப்பட்டனர். அதே ஆண்டில் மொத்தமாக 23,160 பேர் வெளியேற்றப்பட்டதில் 4,837 பேர் மெக்ஸிகோ நாட்டைச் சார்ந்தவர்கள். வெளியாகும் தரவுகளின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகும் குழுவாக உள்ளனர் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக, நிலுவையில் உள்ள 52,457 வெளியேற்ற வழக்குகளில் 11,393 வழக்குகள் இந்தியக் குடிமக்களுக்கு எதிரானவை. கனடாவில் வெளியேற்றம் தொடர்பான மூன்று வகையான உத்தரவுகள் இருப்பதாக கனடா எல்லைச் சேவைகள் முகமை குறிப்பிட்டுள்ளது. ஒருவருக்கு 'வெளியேற்ற உத்தரவு' பிறப்பிக்கப்பட்டால், அவர் கனடாவில் மீண்டும் நுழைய எழுத்துப்பூர்வ அனுமதி பெறவேண்டும். அதுவரை அவருக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும். விலக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், குறிப்பிட்ட நபர் எழுத்துப்பூர்வ அனுமதி பெறும் வரை, ஓராண்டு காலம் கனடாவிற்குள் நுழைய முடியாது. தன்னைப் பற்றிய தவறான தகவல்களை வழங்கியதற்காக அவருக்கு விலக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த நபருக்கு 5 ஆண்டுகாலம் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். புறப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்த நபர் உத்தரவு நடைமுறைக்கு வந்து 30 நாள்களுக்குள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு அவர் வெளியேறாவிட்டால், அவருக்கு ‘வெளியேற்ற உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். கனடாவிற்குள் நுழையவோ அல்லது அங்கு தங்கவோ உரிமையற்ற நபர்களை வெளியேற்றுவது, நாட்டின் குடிவரவு அமைப்பின் நேர்மையைப் பேணுவதற்கும், கனடாவிற்குச் சட்டப்பூர்வமாக வருகை தருபவர்களுக்கான நீதியை உறுதி செய்வதற்கும் அவசியமானது என்று கனடா எல்லைச் சேவைகள் முகமை தெரிவித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கனடாவிலிருந்து 9 மாதங்களில் 4,526 இந்தியர்கள் வெளியேற்றம்!
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗