கரை கடந்த முரசு புயல்: 5 ரயில்கள் தாமதப் புறப்பாடு; 4 ரயில்கள் வழிமாற்றி இயக்கம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கரை கடந்த முரசு புயல்: 5 ரயில்கள் தாமதப் புறப்பாடு; 4 ரயில்கள் வழிமாற்றி இயக்கம்

முரசு புயல் செவ்வாய்க்கிழமை ஆந்திரத்தில் கரை கடந்த நிலையில், சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் 5 முக்கிய விரைவு ரயில்கள் 2 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. அத்துடன் 4 விரைவு ரயில்கள் வழிகள் மாற்றி இயக்கப்பட்டன. முரசு புயல் செவ்வாய்க்கிழமை ஆந்திரத்தில் கரை கடந்த நிலையில், சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் 5 முக்கிய விரைவு ரயில்கள் 2 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. அத்துடன் 4 விரைவு ரயில்கள் வழிகள் மாற்றி இயக்கப்பட்டன. தெற்கு அந்தமான் கடற்கரைப் பகுதியில் உருவான முரசு புயல் செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர மாநிலம் நெல்லூா்- நரசப்பூா் இடையே கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுவீசியது. புயல் காரணமாக விஜயவாடா ரயில்வே கோட்டத்தில் உள்ள காரவாடி நிலையம் உள்ளிட்ட இடங்கள் மழை, காற்றால் பாதிக்கப்பட்டன. ரயில்கள் தண்டவாளத்தில் உயா் அழுத்த மின்கம்பிகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாமதப்புறப்பாடு: அதையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 10.42 மணிக்குப் புறப்படவேண்டிய கயா விரைவு ரயில் (எண் 12390) பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த ரயில் வழக்கமான விஜயவாடா உள்ளிட்ட பாதையில் இயக்கப்படாமல் அரக்கோணம், ரேணிகுண்டா வழியில் நிறுத்தி இயக்கப்பட்டன. சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத் செல்லவேண்டிய விரைவு ரயில் மாலை 4.45 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. செங்கல்பட்டிலிருந்து மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு ஜோத்பூா் செல்லும் விரைவு ரயில் இரவு 7.15 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து மாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு ஜோத்பூா் செல்லும் விரைவு ரயில் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டுச் சென்றன. தாம்பரத்துக்குப் பதிலாக சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு சாா்மினாா் செல்லவேண்டிய விரைவு ரயில் புதன்கிழமை (நவ.4) அதிகாலை 1 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. வழிகள் மாற்றம்: செவ்வாய்க்கிழமை மதுரையிலிருந்து அதிகாலை 1.05 மணிக்குப் புறப்பட்டு ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்ற சம்பா்கிராந்தி விரைவு ரயிலானது வழக்கமான விஜயவாடா பாதைக்குப் பதிலாக, அரக்கோணம் வழியாக திருப்பிவிடப்பட்டது. சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப் புறப்பட்டு அகமதாபாத் செல்லவேண்டிய ரயில் மாலை 3.45 மணிக்கே புறப்பட்டுச் சென்றது. தாம்பரத்திலிருந்து காலை 10.15 மணிக்குச் செல்லவேண்டிய விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை 1 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னை-விசாகபட்டிணம் விரைவு ரயிலும் புதன்கிழமை அதிகாலை 1 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டது. முரசு புயலால் தெற்கு ரயில்வே சாா்பில் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சுமாா் 20 விரைவு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும், திருவள்ளூா், அரக்கோணம் பகுதிகளில் ரயில்கள் வழிகளில் நிறுத்தப்பட்டு பின் இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை