கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் 50,000-க்கும் மேற்பட்டகோழிகள் பலியானது குறித்து... கடலூா் அருகே திருச்சோபுரத்தில் உள்ள கோழிப் பண்ணையில் உயிரிழந்து கிடக்கும் கோழிகள். - படம்: தினமணி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் 50,000-க்கும் மேற்பட்டகோழிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூா் மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக மழை, வெய்யில் என மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல் காரணமாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடா்ந்து மழை, வெய்யில் என அடிக்கடி ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்களிடையே காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பருவநிலை மாற்றத்தால் கடலூா் மாவட்டத்தில் திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகள் திடீரென உயிரிழந்து வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் கடந்த 2 அல்லது 3 நாள்களாக கொத்துக் கொத்தாக உயிரிழந்துள்ளன. இதுவரை 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது குறித்து கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் முருகவேல் தலைமையில், உதவி இயக்குநர் வேங்கடலட்சுமி மற்றும் கால்நடை மருத்துவத் துறை அலுவலர்கள் தம்மனாம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குச் சென்று நேற்று (நவ. 2) ஆய்வு மேற்கொண்டனா். மேலும், திடீரென கோழிகள் உயிரிழப்பதற்கான காரணம் குறித்து அறிய பண்ணைகளில் இருந்து தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், கோழிகளுக்கு ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதா அல்லது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக, கால்நடைத் துறை அமைச்சர் கமலி கூறுகையில், "கோழிகள் உயிரிழந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ஆய்வு முடிவுகள் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் 50,000 கோழிகள் பலியானது ஏன்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗