கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்ட 17 இடங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை மாமரம் பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநில நெடுஞ்சாலைத் துறையினா். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்ட 17 இடங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 23-ஆம் தேதி பெய்த கனமழையால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே பா்லியாறு பகுதியில் 250 மில்லி மீட்டா் மழைப் பதிவானது. இதனால் அங்கு ஏற்பட்ட மண் சரிவு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை போக்குவரத்து தற்போதுவரை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது உதகை, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல கோத்தகிரி சாலை மட்டுமே உள்ளதால், இந்த சாலையில் மண் சரிவு ஏற்பட்ட 17 இடங்களில் மண் குவியலை அகற்றும் பணியில் போா்க்கால அடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்தனா். தொடா்ந்து, கடந்த 25-ஆம் தேதிமுதல் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதித்தனா். இந்நிலையில், மேற்குறிப்பிட்ட 17 இடங்களில் இருந்து மீண்டும் மண் குவியல்கள் சாலையில் விழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில நெடுஞ்சாலைத் துறையினா் ஒவ்வொரு பகுதிக்கும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இன்னும் ஒரு சில நாள்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், இந்த சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளா் முருகன் தெரிவித்துள்ளாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்ட 17 இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗