தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கொச்சியில் சிஜேபி போராட்டம்... கொச்சியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் நடிகர் பிரகாஷ் ராஜ்... - X கேரளத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரளத்தின் கொச்சியில் இன்று (நவ. 7) மாலை 3 மணியளவில் மெரைன் டிரைவ் பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெரோம் உள்பட சுமார் 500-க்கும் அதிகமானோர் கையில் தேசியக் கொடிகளுடன் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ராஜேந்திர மைதான் பகுதியில் நடைபெற்ற சிஜேபி தலைமையிலான போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில், எஸ்ஐஆர் பணிகளை ரத்து செய்து, ஞானேஷ் குமார் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், விடுவிக்கப்பட்ட அவர்கள் இருவரின் மீதும் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொச்சியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி போராட்டம்! பிரகாஷ் ராஜ் தலைமையில் பேரணி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗