மேட்டூர் அணையின் இன்றைய (நவ. 7) நிலவரம் பற்றி... மேட்டூர் அணை நீர்வரத்து - கோப்புப் படம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ. 7) காலை வினாடிக்கு 10,864 கன அடியாக குறைந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,872 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில், சனிக்கிழமை காலை 10,864 கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 58.18 அடியிலிருந்து 58.95 அடியாக உயர்ந்துள்ளது நீர் இருப்பு 23.91 டி.எம்.சி.யாக உள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூர் அணை: இன்றைய (நவ. 7) நிலவரம்!