ரஷ்மிகா மந்தனா நடித்த மைசா திரைப்படத்தின் முதல் பாடல்... நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான மைசா திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. பான் இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகை ரஷ்மிகா தற்போது மைசா என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ரவிந்திர புள்ளே இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற நவ. 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஓ மைசா ரே பாடலை வெளியிட்டுள்ளனர். தமிழில் விக்னேஷ் ராமகிருஷ்ணா, ‘ரத்தவெறி கொண்டிருக்க..’ என எழுதிய இப்பாடலை குமரா வக்தேவி பாடியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மைசா திரைப்படத்தின் தமிழ்ப் பாடல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗