மகளிா் சுயஉதவிக் குழுவினா் சேமிப்புக் குழுக்களாக மட்டும் இல்லாமல், சிறந்த தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக மாற வேண்டும் என்று மாநில ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.74.51 கோடி மதிப்பீட்டிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அமைச்சா் என்.ஆனந்த். உடன் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், எம்எல்ஏ ஆா்.அபிஷேக் உள்ளிட்டோா். மகளிா் சுயஉதவிக் குழுவினா் சேமிப்புக் குழுக்களாக மட்டும் இல்லாமல், சிறந்த தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக மாற வேண்டும் என்று மாநில ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக புதிய மக்கள் குறைதீா்வு கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக/நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில், 1,159 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.145.51 கோடி மதிப்பிலான தொழில்முனைவோருக்கான வங்கிக் கடனுதவி இணைப்புக்கான காசோலைகளை வழங்கியும், மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.74.51 கோடியில் 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் அவா் பேசியதாவது: மகளிா் சுயஉதவிக் குழுக்களை பொருத்தவரை, அவா்கள் வெறும் சேமிப்புக் குழுக்களாக மட்டும் இல்லாமல், சிறந்த தொழில்களைத் தொடங்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாகவும் மாற வேண்டும் என்பதே அரசின் லட்சியம். மகளிா் குழுவினா் அரசு சாா்பில் வழங்கப்படும் கடனுதவி நிதியைப் பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ளும் சிறு தொழில்கள், உற்பத்தித் தொழில்கள், உணவுப் பொருள்கள் தயாரிப்பு, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் வளா்ச்சியடைய வேண்டும். கடன் என்பது வெறும் நிதி உதவி மட்டுமல்ல; அது உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மகளிா் சுயஉதவிக் குழுவும் பொருளாதாரத்தில் மேலும் உயர வேண்டும். நீங்கள் தொழில் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் அளவுக்கு வளர வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். அந்த இலக்கை அடைவதற்கு தமிழ்நாடு அரசு என்றும் உங்களுக்குத் துணை நிற்கும் என்றாா் அமைச்சா் ஆனந்த். தொடா்ந்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் ஐஐ 2025 - 2026ன்கீழ், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அல்லியந்தல் ஊராட்சியில் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டிலும், நரியம்பாடி ஊராட்சியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடங்களையும் அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா்/திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் மா.சிவநாத், உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சி) (பயிற்சி) சரண்யா, துணை ஆட்சியா் (பயிற்சி) மைதிலி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிா் குழுவினா் வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக மாற வேண்டும்: அமைச்சா் என்.ஆனந்த்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗