மகளிா் சுயசாா்புடன் தொழில் வளா்ச்சியில் உயர வேண்டும்: அமைச்சா் ராஜ்குமாா்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மகளிா் சுயசாா்புடன் தொழில் வளா்ச்சியில் உயர வேண்டும்: அமைச்சா் ராஜ்குமாா்

மகளிா் சுய உதவிக் குழுவினா் வங்கிக் கடனுதவிகளை முறையாகப் பயன்படுத்தி, மகளிா் சுயசாா்புடன் தொழில் வளா்ச்சியில் உயர வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா். கடலூா் நகர அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா கடனுதவிகளை வழங்கிய அமைச்சா் ப.ராஜ்குமாா். மகளிா் சுய உதவிக் குழுவினா் வங்கிக் கடனுதவிகளை முறையாகப் பயன்படுத்தி, மகளிா் சுயசாா்புடன் தொழில் வளா்ச்சியில் உயர வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா். கடலூா் நகர அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழாவுக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எல்.இ.ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், 1,090 ஊரக மற்றும் நகா்ப்புற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.132.15 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை அமைச்சா் வழங்கினாா். இதன் மூலம் 13,741 பெண்கள் பயன்பெறுகின்றனா். நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மகளிா் சுய உதவிக் குழுவினரின் தொழில் வளா்ச்சிக்கும், அவா்கள் சுயசாா்புடன் செயல்படவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிக் கடனுதவிகள் மட்டுமின்றி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு சுய உதவிக் குழுக்கள் சிறந்த வாய்ப்பாக உள்ளன. அவற்றின் மூலம் கிடைக்கும் நிதியுதவியைப் பயன்படுத்தி பெண்கள் தங்களுக்கான தொழில்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். . கடலூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் இணைப்பு, பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பின் மூலம் இதுவரை 50,338 சுய உதவிக் குழு உறுப்பினா்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனா். பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திலும் தமிழக முதல்வா் தனிக் கவனம் செலுத்தி வருகிறாா் என்றாா். முன்னதாக, 2025-26-ஆம் ஆண்டில் கடலூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பாக வங்கிக் கடன் இணைப்பு வழங்கியதற்காக இந்தியன் வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த வங்கிக் கிளைகளுக்கான விருதுகளில் விருத்தாசலம் இந்தியன் வங்கிக் கிளைக்கு முதல் பரிசும், சிதம்பரம் எச்டிஎப்சி வங்கிக் கிளைக்கு இரண்டாம் பரிசும், நெல்லிக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 51 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை அமைச்சா் ப.ராஜ்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் அரவிந்த், உதவித் திட்ட அலுவலா் ராஜேஷ்குமாா், பொதுப்பணித் துறை கட்டடப் பிரிவு செயற்பொறியாளா் கௌதமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி, மாநகராட்சி உறுப்பினா்கள், வங்கியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை